உணவை மந்திரித்தல்

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

அருள்வாக்கு 1கொரி.10:31-33

அன்புச் சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

குரு: மன்றாடுவோமாக:

அனைத்தையும் படைத்துப் பாதுகாப்பவரான இறைவா. மனிதரின் உடல் வளமைக்காக நீர் உண்டாக்கிய இந்த உணவை ஆசீர்வதித்தருளும். உமது திருப்பெயரைச் சொல்லி வேண்டுவதால், இதனை உண்போர் அனைவரும் உடல் நலமும் ஆன்மப் பாதுகாப்பும் அடைவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(குரு உணவின்மேல் தீர்த்தம் தெளிக்கிறார்.)