குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
அருன்வாக்கு நீமொ.2:5-10
முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு. அப்பொழுது உன் உடல், நலம் பெறும்; உன் எலும்புகள் உரம் பெறும். உன் செல்வத்தைக் கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
குரு: மன்றாடுவோமாக:
அனைத்தையும் படைத்துப் பாதுகாப்பவரான இறைவா, முதற்கனியான இந்த ………. ஐ ✠ ஆசீர்வதித்தருளும். உமது புனித பெயரால் இதை (இவற்றை) உண்பவர்கள் ஆன்ம உடல் நலனோடு வாழ்ந்து உம்மைப் போற்றிப் புகழ அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குறிப்பு : முதற்கனியில் ஒரு பங்கைக் கோவிலுக்குச் செலுத்துவது சிறப்பு.)