ரோசா மலர்களை மந்திரித்தல்

(சிறுமலர் தெரசாவின் திருநாளில்)

குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பித்தருளும்.

எல்: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

குரு: ஆண்டவரே, எம் மன்றாட்டைக் கேட்டருளும். 

எல்: எம் கூக்குரல் உம்மிடம் வருவதாக.

குரு: மன்றாடுவோமாக:

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம் அன்புக்குரிய தெரசாவின் நினைவாக ஆசீர்வதிக்கும் இந்த மணமிக்க ரோசா மலர்களைக் கருணையுடன் கண்நோக்கியருளும். இவற்றின் நறுமணத்தை நுகரும் அனைவரும், அவளது மன்றாட்டினால் உடல் நலமும் உள்ள நலமும் பெறுவார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.

எல்: ஆமென்.

(ரோசா மலர்கள்மீது குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)