ஆடு மாடுகளை மந்திரித்தல்

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. 

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் படைத்தவை யாவும் எங்களுக்குப் பயன்பட அளிக்கப்பட்டுள்ளன. எங்கள் எளிய நிலையை நோக்கியருள உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் உழைப்பிற்கும் தேவைக்கும் உதவியளித்ததுபோல் உம் அன்பு நிறை இரக்கத்தால் இந்த ஆடு மாடுகளை ஆசீர்வதித்துப் பேணிப் பாதுகாத்தருளும். இதனால் உம் திருப்பெயருக்கு இடைவிடா நன்றியும் புகழும் மகிமையும் உண்டாவதாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)