பொருள்களை மந்திரித்தல்- 1 (குறுகியது)

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உமது வார்த்தையால் யாவும் புனிதமடைகின்றன. நீர் படைத்த இதன் (இவற்றின்) மீது உமது ஆசியைப் பொழிந்தருளும். உமது சட்டத்திற்கும் திருவுளத்திற்கும் ஏற்ப நன்றியுடன் இதை (இவற்றை)ப் பயன்படுத்துவோர் யாவரும் உமது திருப்பெயரைச் சொல்லி வேண்டுவதால், உமது அருளைப் பெற்று, உடல் நலமும் அன்ம பாதுகாப்பும் அடைவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

எல்: ஆமென்.

(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)