ஏப்ரல் - நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்.

00, தேவநற்கருணையைச் சந்திக்கிற வகை!

01, தாகமுள்ளவன் நம்மிடத்தில் வரக்கடவான்.

02, பரலோக அப்பத்தை அவர்களுக்குத் தந்தருளினார்!

03, மனுமக்களோடு கூட இருக்கிறதே நமக்குப் பிரியம்!

04, அவருடைய திருவிலாவில் கசப்பும், அவருடைய உறவில் சலிப்புமில்லை!

05, ஊர்க்குருவிகளுக்கு வீடும், காட்டுப் புறாக்களுக்குக் குஞ்சு பொரிக்கக் கூடும் அகப்படுகையில் சர்வ வல்லவரான கர்த்தாவே, என் ஆண்டவரே சுவாமீ, உமது பீடம் எனக்கு இளைப்பாறும் இடமாயிராமல் இருக்குமோ?

06, உங்கள் பொக்கிஷமுள்ள இடத்தில் உங்கள் இருதயமும் கூட இருக்கும்!

07, இதோ உலக முடியுமளவும் நாம் உங்களோடு இருக்கிறோம்!

08, என் அன்புக்குரியவளே, என் சௌந்தரியே, எழுந்து விரைந்து வா!

09, மார்போடு அணைக்கப்படுவீர்கள்!

10, நம்மை அடைந்தவன் சீவியம் அடைவான்!

11, நாம் நல்ல ஆயனாக இருக்கிறோம்!

12, சர்வேசுரன் அளவில்லாத சிநேகமாயிருக்கிறார்!

13, என் கண்களும் இருதயமும் எப்போதும் இதில் இருக்கும்!

14, இது நாம் எப்பொழுதும் இளைப்பாறும் இடமென்று இதை நாம் தெரிந்து கொண்டதினால், இதில் வாசம் செய்வோம்!

15, நாம் உலகத்தில் அக்கினியைக் கொளுத்தும் படி அல்லவோ வந்தோம்!

16, கலாத்தென்ற மலையில் பரிமள தைலங்கள் அற்றதோ?

17, சிநேகிதர் ஒருவர் ஒருவர் முகத்திற்கு முன்பாக இருக்கிறது மகா இன்பமாயிருக்கிறது!

18, ஒருநாள் கோபாக்கினியால் உலகத்தை நடுத்தீர்க்க ஜோசபாத்து என்கிற வெளியில் எழுந்தருளப் போகிற சேசுவானவர்!

19, இந்தக் கண்ணீர்க் கணவாயிலே துக்கச் சமுத்திரத்தில் அமிழ்ந்தியிருக்கிற நமக்கு ஆறுதல்!

20, அந்நாளில் தாவீதின் சந்ததியாருக்கும் ஜெருசலேம் பட்டணத்தாருக்கும் தங்கள் பாவங்களைச் சுத்திகரிக்கத் திறந்த சுனை உண்டாகும்!

21, சரீரம் இருக்கிறவிடத்தில் அண்டரண்ட பட்சிகளும் சேரும்!

22, உத்தம பத்தினியானவள், என் ஆத்தும் அன்பரான சேசுகிறீஸ்து நாதரைக் காணீர்களோவென்று தேடித் திரிந்த பொழுது சேசுநாதர் உலகத்தில் வாசமாயிராததினால் அவரைக் காணாமற்போனாள்!

23, எனக்கு வரும் நன்மை எல்லாம் தேவநற்கருணையைக் கொண்டு வருகிறதென்று கண்டேன்!

24, நீர் மெய்யாகவே மறைந்திருக்கும் தேவனாயிருக்கிறீர்!

25, சேசுநாதர் மரணபரியந்தம் தமது நித்திய பிதாவாகிய சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்!

26, சீயோன் பட்டணமே! இஸ்றாயேல் தேவனான நிர்மல பரிசுத்தர் உன் நடுவிலிக்கிறதினால் அகமகிழ்ந்து புகழ் கூறு!

27, கிறீஸ்துவர்கள் ஆராதிக்கும் தேவன் அவர்களோடு கூட பிரசன்னமாயுள்ளார்!

28, பரலோக பிதா தமக்குள்ளதெல்லாம் தமது ஏகசுதனுக்குத் தந்தருளினார்!

29, வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறோம்!

30, உமது திரு முகத்தை ஏன் ஒளித்துக் கொள்ளுகிறீர்?