கிறிஸ்துராஜவின் சமூக அரசாட்சி

The Social Reign of Jesus Christ the King

"சேசு கிறிஸ்துநாதரின் போதனைகள் படி நாமும், நமது குடும்பமும், சமூகமும், நம் நாட்டில் உள்ளவர்களும் வாழ்வதை கிறிஸ்துராஜாவின் சமூக அரசாட்சி'' என்கிறோம். கிறிஸ்துவின் ராஜ்ஜியம் வர, முதலில் அவர் அறியப்பட உழைக்க வேண்டும்.

* இன்று உலகம் முழுவதும் - ஒரே - விஞ்ஞானம், கணிதம், பொறியியல், மருத்துவ இயல், மின்னியல், கணினி இயல், கேளிக்கை வகைகள், வாழ்க்கை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எல்லா நாட்டினரும், இனத்தவரும் ஒருமனதாக, மேற்கூறிய எல்லா துறை - விதிகளையும், எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்கிறார்கள்! பிறழாமல் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், 'உண்மையான கடவுளை' மட்டும் ஏற்பதில்லை.

அவர்கள் விருப்பப்படி விஞ்ஞானம் கணிதம் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியாது, ஆனால் 'கடவுளை' மட்டும் எப்படி மாற்றிக் கொள்ள முடியும்?

* உலகின் சீரான செயல்பாட்டிற்கு, “உலக முழுவதும் விஞ்ஞானம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும், கணிதம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்" என்றால், சகலத்தையும் ஒன்றுமில்லாமையில் இருந்து படைத்து ஆண்டுவரும் 'சர்வேசுரன் மட்டும் எப்படி ஒருவராக இல்லாமல் பலவாறாக அவரவர் விருப்பம் போல் இருக்க முடியும்?!

'ஒருவன் - கல்லையோ, சூரியனையோ, பாம்பையோ, குரங்கையோ, பேயையோ, பணத்தையோ, உருவம் இல்லாத எதையோ கடவுள் என வழிப்பட்டால், அவை அனைத்தும் எப்படி சரியாக, நிஜமாக இருக்க முடியும் ??? எல்லா மதங்களிலும் எப்படி இரட்சணியம் இருக்கும்? உண்மைக் கடவுளிடம் மட்டுமே இரட்சணியம் (மோட்சம்) உண்டு.

இந்த உண்மைக்கு விரோதமாக நாம் பலரால் தூண்டப்படுவதிலேயே ஒரு பெரிய மோசடிக்கு உள்ளாகி இருப்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

* நமது நாட்டின் பிரதமரை , ஒருவனுக்கு பிடிக்கவில்லை , அல்லது அவனுக்கு அவரை தெரியவில்லை, அல்லது அவரை பகைக்கிறான் என்ற காரணங்களால், "இந்தியாவின் பிரதமர் அவரே” என்ற நிதர்சன உண்மை (Absolute Truth) மாறிவிடுமா? குறைவு படுமா? அதுபோல விசுவாச அடிப்படையிலும், விஞ்ஞான பூர்வமாகவும் கடவுள் ஒருவரே என்பது நிரூபணமான சத்தியம், Absolute Truth நிதர்சன சத்தியம் - யாருடைய விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருக்கும்.

அறிவு பூர்வமாக யார் அந்த உண்மை கடவுள்? என்று, ஒருவன் கேட்டால், 'தமத்திரித்துவக் கடவுளே அந்த உண்மைக் கடவுள் என்பதை அவன் உணர எண்ணற்ற நிரூபணங்கள் இன்று உள்ளன.

அவற்றில் ஒரு சில : கீழ் வரும் தலைப்புகளில் WWW.google.com- ல் தேடவும்.)

நமதாண்டவர் சேசு கிறிஸ்துவின் பிறப்பும், வாழ்வும், பாடுகளும், உயிர்ப்பும், முன்னறிவிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறின்.

நமதாண்டவர் சேசு கிறிஸ்துநாதரின் அதிகாரம் உள்ள உறுதியான போதனை ! அவர் கடவுளாய் இருக்கிறதால் அப்படிப் போதித்தார் - மற்ற மனித மதத்தலைவர்கள் யாரும் அப்படி அதிகாரத்துடன் பேசவில்லை .

200க்கும் மேற்பட்ட அர்ச்சிஷ்டவர்களின் அழியாத சரீரங்கள் இன்றும் உள்ளன. (Incorruptibles,TAN Book Co.,USA.)

2000 வருடங்களாக கத்தோலிக்கத் திருச்சபையின் - ஸ்தாபிதம், வளர்ச்சி, தொண்டுகள், தொடரும் வளர்ச்சி.

கத்தோலிக்கத் திருச்சபையின் அழியாத தன்மை - இன்றும் நிறைவேறிவரும் தீர்க்க தரிசனங்கள்.

இன்றும் , NASA விஞ்ஞானிகளால் கூட, விளக்க முடியாத தூரின் நகர் துகிலில், (Shroud of Turin) நமதாண்டவருடைய சாயல்.

5 நூற்றாண்டுகளாக இன்றும் அழியாமல் இருக்கும் லான்சியானோL (Lanciano Miracle)) - ''திவ்விய நற்கருணை" புதுமை. விஞ்ஞானிகளால் இன்றும் விளக்க முடியவில்லை !

இன்றும், உலக விஞ்ஞானிகளால் விளக்க முடியாத மெக்சிக்கோ , 'குவாடலூப் துகிலில் தேவமாதாவின் சாயல்." (Our Lady of Guadalupe, Mexico)

லூர்து நகரில் நமது தேவதாய் இன்றும் தினந்தோறும் நிகழ்த்தும் புதுமைகள். அங்கு கிறிஸ்துவர் அல்லாத மருத்துவர்களால் அவை உறுதி செய்யப்பட்டு தினமும் பதிவு செய்யப்படுகின்றன. (Lourdes Miracles )

உலகமெங்கும், தினமும் நமதாண்டவரும், தேவ மாதவும் நமக்கு நிகழ்த்தும் தனிப்பட்ட புதுமைகள்.

லெபான்டோவில் செபமாலையால் கிறிஸ்தவர்கள் அடைந்த வெற்றி. (Lepanto Victory)

தேவமாதா முன்னறிவித்தபடி 1917 ஆம் அக்டோபர் 13 ம் தேதி நண்பகலில் பாத்திமாவில் நமதாண்டவர் சூரியனில் நிகழ்த்திய அற்புதம். 70,000 மேற்பட்ட மக்கள் இதனை நேரில் கண்டார்கள், போர்த்துகீசிய பத்திரிக்கைகள் புகைப்படத்துடன் இச்செய்தியை பிரசுரித்தன. (Fatima, Miracle of the Sun)

பாத்திமாவில் தேவமாதா முன்பே எச்சரித்தப்படி ஐரோப்பா முழுவதும் இரவில் விண்ணில் தோன்றிய , 2ம் உலகப்போர் பற்றிய செந்நிற ஒளி . (Extra-ordinary Auroraborealis)

ஓரியூரில் அர்ச். அருளானந்தர் தலை வெட்டப்பட்ட இடத்தில் மட்டும் இன்றும் சிவந்திருக்கும் LD 600. (St.John De Britto)

அரேப் மலை உச்சியில் இன்றும் காணப்படும் நோவேயின் பேழை (Noah's Ark) செயற்கை கோள்கள் புகைப்படம் அனுப்புகின்றன.

மூலப் பொருட்களைக் கொண்டு ஒரு உயிரைக் கூட உருவாக்க அறியாத இன்றைய மனித விஞ்ஞானம் (Creating Life)

நிறை (Mass), திறன் (Energy) உருவாக்கத்தை பற்றி ஒன்றும் அறியாத இன்றைய மனித விஞ்ஞானம்

ஓரினசேர்க்கை மற்றும் கற்புக்கு விரோதமான பாவங்கள் நிறைந்த சோதோம் - கோமாரா நகரங்களின் தண்டனையால் உருவான இன்றைய சாக்கடல் (Dead Sea).

சேசுநாதர் சுவாமி கூறியதை எதிர்த்து, எருசலேம் தேவாலயத்தை புதுப்பிக்க அஸ்திவாரம் தோண்டிய போது பூமியடியிலிருந்து வந்த நெருப்பு. (Jerusalem temple fire, Julian) ufoot ITID 65176605 160 Gg16061. ((The Failure of the Theory of Evolution)) சிதறல் கொள்கையின் தோல்வி (T(The Failure of the Big - Bang Theory)

தாமாக பொருட்கள் ஒழுங்கு நிலை அடையா என்ற விதி (Second Law of Thermodynamics - En tropy increases in a closed system). அதற்கு மாறாக, உலக படைப்பில் காணப்படும் மிக உயர்ந்த ஒழுங்குநிலை (High degree of orderliness in the universe), தானாகவே வரவில்லை . )

அதிநவீன கருவிகளின் குறைந்த நம்பகத்தன்மை - பெரும் விபத்துக்கள். (LOW reliability of all devices)

மனிதன் பல வலிமைகளை பெற்றிருந்தும், தவிர்க்க முடியாத மரணம்.

நமது விசுவாசத்தினாலும், மேற்கண்ட காரணங்களை சீர்தூக்கி சிந்திப்பதாலும் சர்வேசுரணை அதிகம் அறிந்து அவரை நேசிக்க வேண்டும். நமதாண்டவர் கட்டளையிட்டப்படி, சகல மனிதருக்கும் நமது சத்திய வேதத்தை நமது செயலாலும், நமது சொல்லாலும் போதித்து கிறிஸ்து ராஜாவை சகல மக்களும், தங்கள் ராஜாவாக ஏற்க, உதவ வேண்டும்.

''கிறிஸ்துவின் இராட்சியம் இன்றைய உலகிற்கு ஒத்துவராது, நடைமுறைப்படுத்த முடியாது” என்னும் நவீனர்களின் கருத்தை நாம் உதறித் தள்ள வேண்டும். பரலோக மந்திரத்தில் நாம், ... உம்முடைய இராட்சியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூலோகத்திலும் செய்யப்படுவதாக... என்று கூறுவது ஒப்புக்காக அல்ல! சகல மனிதரும் உத்தம கத்தோலிக்கராக மாறி மோட்சம் சேர வேண்டும். என்பதே கடவுளுடைய சித்தம். அதற்கு நாம் உழைக்க வேண்டும்.

''........ ஒருவன் மோட்சக் கட்டளைகளை இருதயத்தில் ஏற்கும்போது சர்வேசுரனுடைய இராட்சியம் அந்த இருதயத்தில் நிலவுகிறது. அவற்றைக் கடைப்பிடிக்கும் போது, மோட்ச இராட்சியத்தின் பிரஜையாக அவனை மாற்றுகிறது'' என்கிறார் நமதாண்டவர். எனவே நாம் அவருடைய கட்டளைகளை கடைப்பிடிப்போம். நமது நாட்டின் சட்டங்களும், சமுதாய ஒழுங்குகளும் சர்வேசுரனின் 10 கட்டளைகளுக்கு இசைவாக இருக்கும்படி அவற்றை மாற்ற நாம் முயல வேண்டும். முரணாக இருப்பவற்றை நீக்க வேண்டும். இவ்வாறு நம்நாட்டில் கிறிஸ்துவின் இராச்சியம் வர உழைக்க வேண்டும்.