© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதாவுக்குப் பாத்திமா அர்ப்பண ஜெபம்.

எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீரே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உமது மாசற்ற இருதயத்துக்கு நேர்ந்த சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வருகிற துன்பங்களைப் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உம்முடைய மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிகிறோம். இவ்வர்ப்பணத்தை அடிக்கடி விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே

ஆமென்.