மாதாவுக்கு அடிமை சாசனம்.

சகல மோட்சவாசிகளுக்கு முன், கடவுளின் கன்னித் தாயான அமலோற்பவ மரியாயே உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன்.

உமது அடிமையாக என் சரீரத்தையும் ஆத்துமத்தையும், என் உள் எண்ணங்களையும் ஐம்புலன்களையும் என் எல்லாவற்றையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரியைகளையும் பலன்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்துக்காக உமது பிரியப்படி நீரே முழு உரிமையுடன் என்னை ஆண்டு நடத்த கையளிக்கிறேன்.

ஆமென்.