நோய்நொடி நீக்க வல்லவரே - எம்
பார்புகழ் புனித செபஸ்தியாரே
வேதத்திற்காய் உயிர் தந்தவரே
யாவர்க்கும் அருள்வரம் தருபவரே
போற்றிப் புகழ்ந்து பாடிடுவோம் - நம்
புனிதரின் பெருமைகளை
1. இறையாட்சி மண்ணில் மலர தன்னையே தந்தவராம்-நம்
இறை இயேசு உரைத்த நல்வழியில்
என்றுமே வாழ்ந்தவராம்
இறைஞ்சுவோர்க்கிரங்கி இறைவனை வேண்டி
நிறைவரம் தருபவராம் அவர் புகழினைப் பாடிடுவோம்
2. உயர்ந்த குலத்தில் பிறந்து வளர்ந்த கோமகனாம் - திரு
மந்திர நகரில் வீற்றிருக்கும் பாதுகாவலராம்
வைசூரி அம்மை வாந்தி பேதி நீங்கிடச் செய்பவராம்