♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா
தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத் தரித்து முடித்தார்
2. சாவின் கூர் ஓடிந்து - மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்