கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேவ மாதாவுக்கு கொடுக்கப்பட்ட தேவதூஷனங்கள் ரொம்பவே அதிகம்…
16- நூற்றாண்டில் CSI – உதயமானபோது கூட மாதாவுக்கு இவ்வளவு நிந்தைகள் வந்ததில்லை.. ஆனால் 50 வயதைக் கூட தாண்டாத பிரிவினை சபையினரால் மாதாவுக்கு வந்த நிந்தைகள் இருக்கிறதே.. அப்பப்பா.. நம் செவிகள் சகிக்காதவைகள்.. அவர்களுக்கு நாவு கூச வில்லை.. உடல் கூச வில்லை.. தேவதூஷனம் சொல்ல..
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுப்பட்டிக்குள் வாயில்வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக்குதிப்பவன் திருடன், கொள்ளைக்காரன்.
வாயில்வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன்; அருளப்பர் ( யோவான்) 10 : 1-2..
நீங்கள் கத்தோலிக்கர்களை எப்படிப் பிடித்தீர்கள்.. வாயில் வழியாகவா? ஏறிக் குதித்தா..?
“நாங்க ஜெபம் சொல்ல வருகிறோம், நீங்க சும்மா ஒரு நாள் வாங்க.. அது மட்டுமல்ல வீடு தேடி வந்து.. கத்தோலிக்கர்களை குழப்பி.. பைபிள் வசனத்தை வைத்து குளப்பித்தானே இழுத்து சென்றீர்கள்..
“நற்செய்தி அறிவிப்பு பணி என்றால் என்ன? ஆண்டவரைப் பற்றி அறியாத பிற மதத்தினரிடம் அல்லவா சென்றிருக்க வேண்டும். ஏன் கத்தோலிக்கர்களை இழுத்தீர்கள்.. குடும்பத்தில் ஒருவர் சென்றுவிட்டால் மொத்த குடும்பத்தையும் இழுப்பது… தெருவில் ஒரு குடும்பம் சென்றால் அதை வைத்து அந்த தெருவையே காலி செய்வது…
பிள்ளைப் பிடிப்பவனைப்போல் …மிட்டாய் காட்டி.. ஆசீர்வாதம் வரும்.. பணம் கொளிக்கும், கஷ்ட்டம் தீரும் என்று சொல்லி கத்தோலிக்கனிடம் இருந்த விசுவாசத்தை அகற்றி அவனுக்கு சந்தேகத்தை வரவழைத்து குளப்பத்தை உண்டுபன்னித் தானே நயவஞ்சகமாக அழைத்துச் சென்றீர்கள்..
“சிலை வழிபாடு “ என்ற ஒன்றை வைத்தே எத்தனை பேரை இழுத்தீர்கள்..
கத்தோலிக்க மக்கள் நீங்கள் சொல்வதற்கெல்லாம்.. தலையை ஆட்டி சிந்திக்க தெறியாத செம்மறி ஆடுகள் போல் வந்ததை சாதகமாக்கிக் கொண்டீர்கள்.. ( அப்படியே மாதா சுரூபத்தையும், சூசையப்பர் சுரூபத்தையும் கையைத் தொட்டு முத்தம் செய்துவிட்டால் ஆண்டவர் நரகத்திலா தூக்கி போட்டுவிடுவார்.. அல்லது கையை வெட்டி விடுவாரா? எதற்கெடுத்தாலும் குறுக்கு புத்தி.. நீங்கள் உங்கள் அம்மா.. அப்பா படங்களை முத்தி செய்வதிவதில்லை.. சிலை வழிபாட்டுக்கு வேறு அர்த்தம் உள்ளது.. கெட்ட நடத்தை, காமம், குடிவெறி என்று ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறார் புனித சின்னர்ப்பர் (பவுல்))
(உங்களிடைய அத்தனைக் கேள்விகளுக்கும் எங்களிடம் பைபிள் ரீதியாகவே விடை உள்ளது. தேவ ஸ்நேகமும் விசுவாசமும் இல்லாத உங்களிடம் ஏன் பதில் சொல்ல வேண்டும்..? அதையும் நம்ப மாட்டீர்கள். அதற்கும் குதர்க்கம் பேசுவீர்கள். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் நாத்தீர்கள் இல்லை. கடவுளுடைய திட்டங்களையும், விசுவாச கோட்பாடுகளையும் நம்பாதவர்களும் நாத்தீர்களே.. தெய்வீகக்கண்கள் கொண்டு பார்த்த பல புனிதர்களுக்கே பல விஷயங்கள் விளங்கவில்லை.. மனிதக்கண் கொண்டு பார்க்கும் உங்களுக்கு எங்கே விளங்கப்போகிறது. கடைசி வரை சந்தேக நோயோடு அலையப்போகிறீர்கள்.. )
பைபிளே வாசிக்காத கத்தோலிக்கர்களை கத்தோலிக்க திருச்சபை கொடுத்த பைபிளைக்கொண்டும், பைபிள் வசனத்தை வைத்தே குளப்பி நீங்கள் எதோ அறிவாளிகள் போலும், அவர்கள் எதோ முட்டாள்கள் போலும் அவர்கள் மட்டுமல்ல 20 நூற்றாண்டுகளாவும், இப்போதும் இருக்கும் கத்தோலிக்க திருச்சபை எதுவுமே தெறியாத திருச்சபை போலும், ஆண்டவர் உருவாக்கியது ஏதோ போலி போலும் நீங்கள் மட்டுமே உண்மையான சபை போலும் ஒரு மாயையை உருவாக்கி மயக்கினீர்களே.. இப்போது உங்கள் சபையின் எண்ணிக்கை ஏத்தனை ஆயிரம்.. உங்களுக்குள்ளே ஒற்றுமாயாய் இருக்க முடியவில்லையே ஏன் அப்பாவிகளை வளைத்தீர்கள்..
20 வருஷ்ம், 30 வருஷ்ம் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருந்த மரியாயின் சேனையினரைக்கூட பிடித்துவிட்டீர்கள்…அவர்கள் எல்லாம் இருந்திருந்தால் இன்னும் அதிகமாக ஜெபமாலை ஜெபிக்கப்பட்டிருந்தால் இந்த விளைவு வந்திருக்குமா?
“தன் வாலால் விண்மீன்களில் மூன்றிலொரு பகுதியை மண்மீது இழுத்துப்போட்டது” திருவெளிப்பாடு 12: 4
அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது. திரு 12: 15
அத்தனையும் தேவ தூஷனம்.. கடவுளின் தாயைப் பழிப்பது கடவுளைப் பழிப்பதாகும்… கடவுளின் தாயை பழித்துவிட்டு கடவுளை ஒருபோதும் புகழ் முடியாது..
அகில உலகத்தையும் படைத்த கடவுள் அவரால் படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியின் வயிற்றில் தன்னையே அடைத்துக் கொண்டு பத்து மாதம் இருப்பாராம்.. முப்பது ஆண்டுகள் (33) அந்தத் தாய்க்கு கீழ்படிந்து இருப்பாராம்.. அந்தப் பெண் உங்களுக்கு சாதாரனப் பெண்..
பிதாவுக்கு மகள், வார்த்தையாய் இருந்த சுதனை இந்த உலகம் மீட்படைய தன்னுடைய சதையையும், இரத்ததையும் கொடுத்த சுதனின் தாய், பரிசுத்தஆவியானவரின் மணவாளி, ஆலயம் உங்களுக்கு சாதாரனப் பெண்..
நேரம் வரவில்லை என்று சொன்ன ஆண்டவரையும் புதுமை செய்ய வைத்த பெண் உங்களுக்கு சாதாரனப்பெண்..
அவரோடு மூன்று ஆண்டுகள் இருந்த சீடர்களே கடவுளை தவிக்கவிட்டு ஓடினாலும் கல்வாரியின் கடைசிவரை இருந்து மீட்பின் திட்டத்தில் பங்கேற்று, தன் பரிசுத்த வியாகுலத்தால், ஆண்டவரின் துன்பக்கலத்தில் பங்கேற்று மனுக்குலத்தின் மீட்புக்கு தன்னையே கையளித்த தாய் உங்களுக்கு சாதாரனப் பெண்.. அதற்கு பரிசாக உலக மக்களையே பிள்ளைகளாகப் பெற்று உலகத்தின் தாயான மாதா உங்களுக்கு சாதாரணப் பெண். ஆண்டவர் மரித்த பின் அவரோடு இருந்த பெண் சீடர்களே விசுவாசமில்லாமல் ஆண்டவரின் உடலுக்கு தைலம் பூச போன போதும் தன் மகன் சொன்னபடி மூன்றாம் நாள் உயிர்த்தெழுவான் என்று அவருக்காகக் காத்திருந்த விசுவாசத்தின் தாய் உங்களுக்கு சாதாரன பெண்..
மகனின் உயிர்ப்பிற்கு பிறகு பயந்து போய் ஒளிந்திருந்த சீடர்களையெல்லாம் ஒன்றினைத்து அவர்களோடு ஜெபித்து பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்றுத்தந்த பெண் உங்களுக்கு சாதரன பெண் (அப் 1:14)
சபையின் பெயர் பெந்தகோஸ்தே.. பெந்தகோஸ்தே திருவிழாவில் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவி பொழியப்பட்டபோது.. தேவ தாய் அங்கே இருக்கிறார்கள் ஆனால் பெந்தகோஸ்தே சபையில் மாதாவுக்கு இடமில்லை..
ஒரு பரிசுத்த ஆவியின் ஆலயத்தை பரிசுத்த ஆவியின் பெயரைச் சொல்லி எப்படியெல்லாம் பழித்தீர்கள்.. எத்தனை கத்தோலிக்கரை ஏமாற்றி அழைத்துச் சென்றீர்கள்..
இந்த உலகதிற்கு மீட்பு கிடைக்க காரணமாயிருந்த, அந்த மீட்புத்திட்டத்தில் கடவுளோடு ஒத்துழைத்து செயல்பட்ட.. எல்லாமே கடவுள் கடவுள் என்றிருந்த முதல் கிறிஸ்தவள், இயேசுவின் பிரமானிக்கமுள்ள முதல் சீடர், கடவுளின் தாய் உங்களுக்கு சாதாரண பெண்…
இப்போது ஏன் இந்தப் புலம்பல்.. காரணம் ஒன்றுதான்.. இப்போதாவது தங்கள் தவறுகளை திருத்தி திரும்பவும் அவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையோடு இனைய மாட்டார்களா? இந்த ஒரு மிகவும் இக்கட்டான நிலையில் அவர்களும் நம்மோடு சேர மாட்டார்களா? ஜெபமாலை சொல்ல மாட்டார்களா? தப்பிக்க மாட்டார்களா? என்ற நப்பாசைதான் காரணம்.. எத்தனை ஆண்டுகளாக பூசையின்றி, திவய நற்கருணை இன்றி, பாவசங்கீர்த்தனம் இன்றி இருந்திருப்பார்கள் ( அவர்கள் கொடுப்பது திவ்ய நற்கருணை அல்ல.. ஆண்டவர் கொடுத்த அதிகாரம் கத்தோலிக்க குருக்களுக்கே.. அந்த அர்ச்சிக்கப்பட்ட கரங்களுக்கே…எப்போதுமே.. மாதிரி.. இன்னொரு மாதிரிதான்.. ஒர்ஜினல் அல்ல)
“ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். திருவெளி 12: 17
எஞ்சிய மாதாவின் பிள்ளைகளாவது கடைசிவரை மாதாவோடு நின்று பேய்க்கெதிராய் சண்டை போடுவீர்களா? மாதாவுக்கு உதவுவீர்களா? தினமும் ஜெபமாலை செய்வீர்களா?
பிரிவினை சபையினரே! நீங்கள் வந்தால் உங்களுக்கு நல்லது… வராவிட்டாலும் பரவாயில்லை.. ஆட்டுப்பட்டிக்குள் மீண்டும் ஏறி குதிக்காமல் இருந்தால் போதும்.
“எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் தேவதூஷணமும் மனிதருக்கு மன்னிக்கப்படும்.
“ஆனால், ஆவியானவரைத் தூஷிப்பது மன்னிக்கப்பெறாது. மனுமகனுக்கு எதிராகப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான். ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவன் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறான்.
"மரமும் நல்லது, கனியும் நல்லது என்று சொல்லுங்கள்; அல்லது மரமும் தீயது, கனியும் தீயது என்று சொல்லுங்கள். மத்தேயு 12 : 31-33
கடைசியாக.. உங்கள் கூற்றுப்படி கத்தோலிக்கர்கள் நரகம் போவார்கள்.. நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் நீங்கள் மோட்சம் போவீர்கள் என்று..
நீங்கள் பாவமே செய்ததில்லையோ..
“நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை “ ( 1 அரு (யோவான்) : 8
“நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை “ 1 அரு : 10
கடவுளையே பொய்யராக்குபவர்களுக்கு கடவுள் கண்டிப்பாக மோட்சத்தைக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.. எவ்வளவு பெரிய போதகரானாலும் பாவசங்கீர்த்தனம் இல்லையென்றால்.. பாவங்கள் மன்னிக்கபடவில்லையென்றால்… அவர் எங்கு போவார்.. பரிசுத்தமின்றி பரமனைத் தரிசிக்க முடியாது என்பதும் உங்களுக்கு நன்றாக தெறியுமே..
அதிசயம் அற்புதம்.. முக்கியமல்ல.. பிசாசுகள் கூட அதிசயங்கள் செய்யும் என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்..
“போலி மெசியாக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக்கூடிய பெரும் அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்” மத்தேயு 24: 24
இனியாவது மோசம் போகாமல் வந்து சேருங்கள்.. நீங்கள் இருப்பது மிகப்பெரிய ஆபத்தில்…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !