பாத்திமா அன்னை கொடுத்த மூன்றாவது இரகசியம்!

(இது 1993 ம் ஆண்டு வெளிவந்த செய்தி! இப்போது லூசியா அவர்கள் உயிரோடு இல்லை).

பாத்திமா நகரில் நமதன்னை வெளிப்படுத்திய செய்தியை மக்களுக்கெல்லாம் பரப்ப திருச்சபை இப்போது அனுமதி தந்துள்ளது

பாத்திமா நகரில் மாமரி அன்னை மூன்று சிறுவர்களுக்கும் காட்சி தந்தார்கள் அவர்களில் ஒருவரான லூசியா இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் ( இது 1993 வெளிவந்த செய்தி இப்போது லூசியா அவர்கள் உயிரோடு இல்லை  )  போர்த்துகல் நாட்டில் ஒரு துறவற சபையில் அருள் சகோதரியாக வாழ்ந்து வருகின்றார்கள் லூசியா வழியாக பாப்பரசர் 12 ம் பத்திநாதருக்கு   அன்னையின் தீர்க்கதரிசன செய்தி வெளிப்படுத்தப்பட்டது  அவர் அதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார் ஆனால் செய்தியை வெளியிடாமல் மூடி வைத்து இருந்தார்

அவருக்கு பின் 23 ம் அருளப்பர் வந்தார் அவருக்கும் இந்த செய்தி வெளிப்படுத்தப்பட்டது அவரும் செய்தியை மூடி வைத்தார்  வத்திக்கான் அதிகாரிகளும் அதை வெளிப்படுத்தவில்லை மக்கள் பீதி அடைந்து குழம்பி விடுவார்கள் என்று பயந்தார்கள்  அதன் பிறகு 23 ம் அருளப்பருக்கு பின் 6 ம் சின்னப்பர் பாப்பரசராக வந்தார் அவரும் பாத்திமா செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் அவர்  1963-64 ம் ஆண்டில் செய்தியின் ஓர் பகுதியை மட்டுமே வெளியிட்டார்  காரணம் காலம் நெருங்கி கொண்டே வந்தது

பாத்திமா அன்னை லூசியாவுக்கு கொடுத்த மூன்றாவது இரகசியம் ஒரு பகுதி

எனது குழந்தையே  1950 க்கும் 2000 க்கும் இடையில் நடக்கப் போவதை உலகத்துக்கெல்லாம் போய் சொல் என்றார்கள்

( நமது அன்னையின் பரிந்துரையின் பேரில் இன்னும் இந்த செய்தி கடந்து கொண்டே போகிறது ஆனால் எப்போதும் நடக்கலாம் )

அன்னை கொடுத்த மூன்றாவது இரகசியம்

கடவுளின் கட்டளைகளை மனிதன் கடைப்பிடிப்பது இல்லை சாத்தான் உலகத்தை ஆளுகிறான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்க அவன் தூண்டி விடுகிறான் ஒரு சில நிமிடங்களில் உலகத்தையே நிர்மூலமாக்கும் அனு ஆயுதங்களை தயாரிக்கிறான்  மனுக்குலத்தின் பல பகுதி  அழிக்கப்படும்  திருச்சபைக்கு கஷ்டமான காலகட்டம் வரப்போகிறது  தீயவனோ மனுக்குல மக்களின் மத்தியில் வாழ்வான்  ஒருவரை ஒருவர் பொருத்து கொள்ளாதபடிக்கு சாத்தான் விதைகளை விதைப்பான்  மக்கள் அதனால் விசுவாசத்தை இழப்பார்கள்  உரோமாபுரியை எதிர்த்து போர் கிளம்பும்  துறவற சபைகளுக்கு மத்தியில் பூசல்கள் ஏற்படும்  பலவீனர்களும் தீயவர்களும்  தடுமாறி விழுவார்கள்  குறைவான விசுவாசம் உள்ளவர்களும் அழிவார்கள்

சுரங்கக்கரி , புகை , வெள்ளம், கல்மழை , நெருப்பு, கனமழை , தாங்கமுடியாத சீதோஷ்ண நிலை , பயங்கர குளிர், பூமி அதிர்ச்சிகள் , போன்ற இயற்கை சீற்றங்கள்  நிகழ்ந்து பூமியில் உள்ள உயிரினங்களை சிறிது சிறிதாக  அழிக்கும் ,  நம் ஆண்டவரில்  விசுவாசம் இல்லாதவர்கள் மடிவார்கள்  அவர்கள் வாழ்க்கை உலக சுகபோகங்களையே அடிப்படையாகக் கொண்டது இலட்சக்கணக்கான பேர் சில வினாடிக்குள் செத்து மடிவார்கள் உயிரோடு இருப்பவர்கள் கூட நாமும் செத்து போயிருக்கலாமே என்று நினைப்பார்கள்

வரப்போகும் பயங்கரத்தை நினைத்துப் பார்க்கவும் நமக்கு முடியாது  ஆனால் அது நிச்சயம் வந்தே தீரும்  ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாமல் பாவத்தில் வாழ்பவர்களை ஆண்டவர் கடுமையாக தண்டிப்பார்  ஆண்டவரிடம் உண்மையாக  விசுவசிப்பவர்களும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருக்கு பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் மட்டுமே தப்பித்துக் கொள்வார்கள்  அவர்கள் இன்னும் உறுதியாக இருப்பார்கள்

என் மகனிடம் திரும்பி வாருங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கின்றேன் ஆண்டவரிடம் உதவி உண்டு  இந்த எச்சரிக்கையை புறக்கணிப்பவர்களுக்கு  ஐயோ பரிதாபம் , என்று அம்மா சொல்கிறார்கள்.

உரோமை நகர் வாசியான அருட்தந்தை அகஸ்டின் என்பவர் தற்போது பாத்திமாவில் வாழ்கின்றார் பாப்பரசரின் உத்தரவின்படி அவர் புனித லூசியாவை சந்தித்தார் அப்போது புனித லூசியா சொன்னதை தந்தை அவர்கள் வெளியிட்டார்கள்

உரோமை நகர் அருட் தந்தை அகஸ்டின் அவர்கள் புனித லூசியாவை சந்திக்கிறார்

லூசியா சகோதரி  அவர்கள் மிகுந்த சோகத்தோடு என்னைப் பார்த்தார்கள்  பேட்டியின் போது சகோதரி அவர்கள் என்னிடம் சொல்லியது

தந்தையே  நமது மாமரி அன்னை  மிகுந்த சோகத்தோடு இருக்கிறார்கள் ஏனெனில்  அன்னை அவர்கள் 1917 ம் ஆண்டு  நமக்குத் தந்த தீர்க்கத் தரிசனத்தை  யாரும் பொருட்படுத்தவில்லை நல்லவர்கள் அவர்கள் போக்கிலே நடக்கிறார்கள் அவர்களுக்கும் அன்னையின் தீர்க்கதரிசன வார்த்தைகளில் ஈடுபாடு இல்லை .

கெட்வர்களோ அழிவுக்குச் செல்லும் அகலப்பாதையிலே போய் கொண்டிருக்கிறார்கள் , தந்தையே நான் சொல்வதை நம்புங்கள் தண்டனை சீக்கிரமாக வரப் போகிறது பாவம் செய்யும் ஒவ்வொரு மனிதனும் அழிந்து போவார்கள்  இதன் காரணமாக நம் அன்னை மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள் , தண்டனை சீக்கிரமாக வரப் போகிறது அநேகர் அழிந்து போவார்கள் அநேக நாடுகள் அழிந்து பூமியில் இருந்து மறைந்து போகும்

இதற்கிடையில் மனிதர்கள் மனம் மாறி ஜெபிக்கவும்  நல்லதை செய்யவும்  தொடங்கினால்  இவ்வுலகம் அழிவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் , மனம் திரும்பவில்லை என்றால் தப்பிக்க வழியே இல்லை  அநேகர் நித்திய நரகத்திற்கு உள்ளாவார்கள்  எனவே எல்லோரும் பாரத்தோடு ஜெபிக்கும் காலம் இது தினமும் ஜெபமாலை தியானிக்க வேண்டும் குடும்ப ஜெபமாலை தியானிக்க வேண்டும்  பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும்  அவரவர் இந்த செய்தியை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்

நாம்நாம் கடைசி காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம்  இந்த பயங்கர வேதனைக்கு முன்பு அனைவரும் கத்தோலிக்க திருச்சபைக்கு திரும்புவார்கள்  அனைவரும் ஒரே திருச்சபைக்கு திரும்புவார்கள் அதுவே இயேசு கிறிஸ்து உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபை  மேலும் அனைத்து உலகினரும் மாமரி அன்னையை ஏற்றுக் கொள்வார்கள்  இவ்வாறு அருட் சகோதரி லூசியா சொன்னார்கள் என்று அருட் தந்தை அகஸ்டின் அவர்கள் சொலல்கிறார்கள்

மேலும் புனித லூசியா சொன்னது

பாப்பரசரும் , ஆயர்களும் மனஸ்தாபப் பட்டு செபிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று பொது மக்கள்  கூறலாம்  ஆனால் அது போதாது  அனைவரும் ஜெபித்து தவம் செய்ய வேண்டும் என்று தேவத்தாய் நம்மை அழைக்கிறார்கள், உலகம் மனம் திரும்ப ஜெபியுங்கள்  நேரம் மிகவும் குறைவாக உள்ளது

நமக்கு முன் காத்திருப்பது என்ன ?

சமாதான பேச்சு எங்கும் நிலவும்  நம்பிக்கை தரும் பேச்சுவார்த்தைகள் கேட்கும்  ஆனாலும் நிச்சயம் தண்டனை வந்தே தீரும்  உயர் பதவியில் உள்ள ஒருவர் கொலை செய்யப் படுவார்  அது மிகப் பெரிய யுத்த புரட்சியாக மாறும்  ஒரு பெரிய போர்ப் படை ஐரோப்பிய கண்டத்தை முற்றுகை இடும் அதோடு பயங்கர அனு ஆயுதப்போர் தொடங்கும் அது எல்லாவற்றையும் நிர்மூலமாக்கும் அதனால் ஏற்படும் புகை மண்டலம் ஜீவப் பிராணிகளையெல்லாம் அழிக்கும் மூன்று நாட்கள் பூமி முழுவதும் ஒரே இருட்டாக இருக்கும்  மனுக்குலத்தின் மூன்றில் ஒரு பகுதியே தப்பிப் பிழைக்கும்  அந்த மூன்று நாட்கள் இருட்டிற்கு பிறகு புதிய சகாப்தம் ஒன்று உருவாகும்

ஒரே குளிரான இரவு நடுச்சாமத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு பூமி அதிர்ச்சி உண்டாகும் அது பூமியை முழுவதும் குலுக்கும் 8 மணி நேரம் இந்த பூமி அதிர்ச்சி நீடிக்கும்  கடவுள் தான் இந்த உலகை ஆட்சி செய்கிறார்  என்பதற்கு இது மூன்றாவது அடையாளம்  நல்லவர்களும். இந்த தீர்க்க தரிசனத்தை பரப்புகிறவர்களும் பயப்படத் தேவையில்லை இவ்வாறு புனித லூசியா சகோதரிக்கு தேவத்தாய்  சொல்கிறார்கள்.