© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

⛪ சம்மனசுக்களின் இராக்கினியான அர்ச்சியசிஷ்ட தேவமாதா படிப்பித்த ஜெபம்.

ஓ! பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே! சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே! ஆதிகால முதல் பசாசின் தலையை நசுக்கும்படியான  வல்லமையும் அலுவலும் இறைவன் உமக்குத் தந்தருளினாரே! தேவரீர் தயவு செய்து உமது இராணுவச் சேனைகளை இப்பூமியில் அனுப்பி, அவர்கள் உமது வன்மையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும், பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி, பின் தொடர்ந்து துரத்தி, அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி நரக பாதாளத்துக்குத் திரும்பவும் அவைகளை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக. பரிசுத்த சம்மனசுக்களே! அதிதூதர்களே! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீராக. ஆமென்.