என்னுரை: அர்ச். போர்ட் மவுரீஸின் லியோனார்ட் ஆற்றிய பிரசங்கம்

புனித போர்ட் மவுரீஸின் லியோனார்ட் ஆற்றிய பிரசங்கம் திருச்சபையின் புகழ் பெற்ற மறையுரை நூல்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இந்நூல் முழுக்க முழுக்க ஆன்ம இரட்சணியம் குறித்தே வலியுறுத்துகிறது.

நரக நெருப்பின் கொடுமை குறித்து எச்சரித்து மாபெரும் பாவிகளையெல்லாம் மனம் திருப்பிய இந்த புனிதர், கிறிஸ்தவ மக்கள் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள் என்று பெருமை பாராட்டிக் கொண்டாலும், அவர்களில் சொற்பமானவர்களே இறுதியில் இரட்சணியம் பெறுகிறார்கள் என்ற உண்மையை கவலையோடு வெளிப்படுத்துகிறார்.

தாமே விரும்பினாலன்றி எவரும் நரகத்திற்குச் செல்வதில்லை என்னும் புனிதரின் கூற்றுப்படி, மோட்சம் சென்றடைய நமக்கு மனமிருந்தால் நிச்சயம் மார்க்கமுண்டு. எனவே இந்நூலின் உட்பொருளை நன்கு ஆய்ந்து உணர்ந்து படிக்குமாறு இறைமக்களை கேட்டுக் கொள்கிறேன். இதனை இரண்டாம் முறையாகப் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இறை இயேசுவில் அன்புள்ள

டாக்டர் A. ராஜா பிஞ்ஞேயிர