கட்டுப்பாடுகள் எதுவுமற்ற வாழ்வு நடத்துபவர்களின் ஆணவத்தை அடக்க மிக உதவியாக இருக்கும். சில சத்தியங்களை போதக மேடையிலிருந்து அறிக்கையிடுவது வீணான வினோதப் பிரியம் அல்ல. அது தகுந்த பயனுள்ள முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
இவர்கள் எப்போதும் கடவுளின் இரக்கத்தைப் பற்றியும், மனம் திரும்புவது எவ்வளவு எளிது என்பது பற்றியும் பேசுகிறார்கள். எல்லா வகையான பாவங்களிலும் மூழ்கியவர்களாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
நரகத்திற்குச் செல்லும் பாதையில் இவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைச் சூழ்ந்துள்ள மாயையிலிருந்து இவர்களை விடுவித்து, ஒரு செயலற்ற உறக்க நிலையிலிருந்து இவர்களை எழுப்பும்படி, இன்று நாம் இந்த மாபெரும் கேள்வியை ஆராய்வோம்.