பிதாவுடையஞ் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே ஆமென்.
திரிகாலச் செபம் செபிக்கவும்.
சிருஷ்டிகரான இஸ்பிரீத்து சாந்துவே! நீர் எழுந்தருளி வந்து உம்முடையவர்களின் இருதயங்களிற் குடிக் கொண்டருளும். நீர் உண்டு பண்ணின இருதயங்களை மேலான அனுக்கிரகத்தால் சம்பூரணமாக்கியருளும். திரு உபசாந்தி எனப்படுகிறவரே!
மகா உந்நத சர்வேசுரனுடைய தத்துவமே சீவிய ஊருணியே அக்கினியே சிநேகமே ஞானாபிஷேகமே ஏழு வரங்களால் இலங்கியவரே பிதாவின் வலது கரத்தின் வல்லபமே, ஆசாரத்தின்படி பிதா வினால் ஆன வார்த்தைப்பாடே, நாவுக்குப் பலங் கொடுப்பவரே இடைவிடாத அறத்தால் எங்கள் சரீர பலவீனங்களைத் தாபரித்து எங்கள் இருதயங்களில் அன்பைப் பொழியும் எங்கள் சத்துருவை அப்பால் அகற்றி விரைவில் எங்களுக்குச் சமாதானத்தைக் கொடும்.
இவ்வகையாய் நாங்கள் உம்மை நேர் துணையாகக் கொண்டு சகல தின்மைகளுக்கும் தப்பித்துக் கொள்வோமாக. உம்மால் நாங்கள் பிதாவை அறிந்து சுதனையும் கண்டு கொண்டு, இவ்விருவரின் இஸ்பிரீத்து நீர் என்று நாங்கள் எக் காலத்திலும் விசுவசிப்போமாக. பிதாவாகிய சர்வேசுரனுக்கும் மரித்தவர் களிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தருளின் அவரது சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் சதாக் காலமும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது. ஆமென்.
என்னை உண்டு பண்ணிக் காப்பாற்றிப் பரிபாலனம் செய்து கொண்டு வரும் சர்வேசுரா, பூமியின் நீச வஸ்துவாகிய நான் உமக்கு என்ன நன்றியறிந்த தோத்துரம் செய்வேன்? நித்திய காலமாய்த் தேவரீர் என்னை நினைத்து ஒன்றுமில்லாமை யிலிருந்து என்னை எடுத்து எனக்காக உயிரை முதலாய் விட்டுத் தினந்தோறும் எனக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்து வருகிறீர். வானுலகில் வாழும் சம்மனசுகளே, அர்ச்சியசிஷ்ட வர்களே, ஆண்டவரை ஸ்துதித்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்ய எனக்கு ஒத்தாசையாக வாருங்கள். ஆ கடவுளே! நித்திய வெளிச்சத்தின் சுனையே! என் பாவங்களின் அவலட்சணத்தை மறைக்கும் இருளை அகற்றித் தேவரீர் அவைகளை எம்மாத்திரம் அருவருக்கிறீரோ அம்மாத்திரம் நானும் அவைகளை அருவருக்கத் தயை செய்யும்
திரிகாலச் செபம் செபிக்கவும், பர.அருள் விசுவாச மந்திரம்.
ஆத்தும சோதனை செய்கிற வகையாவது
சுவாமியைப் பற்றியது.
என் கடமைகளில் பிசகினேனா? பத்திக் கிருத்தியங்களில் பராக்காயிருந்தேனா? எந்தக் காரியங் களையும் சுவாமிக்கு பிரியப்பட மாத்திரம் செய்தேனா? ஆங்காரம் சுய பட்சத்திற்காகவும் மகிமையில் விருப்பமுற்று மனச்சாட்சிக்கு விரோதமாகவும் கிரியைகளைச் செய்தேனா? பிறரைப் பற்றியது: ... பிறர் பேரில் தகாத தீர்மானங்களைச் செய்தேனா? பிறர் பேரில் சண்டையிட்டு நிந்தித்து கோள்குண்டணி பேசிப் பரிகாசம் செய்தேனா? அவர்கள் கீர்த்திக்கு குறைபாட வருத்தினேனா? அவர் களுக்குத் துன்மாதிரிகையாயிருந்தேனா? சிநேகத்திற் பிசகினேனா பெரியோருக்குச் மரியாதை செய்யாதிருந்தேனா? காயம் காரம், பொறாமை, ஆவலாதி கொண்டு நீதியிற் பிசகினேனா? தன்னைப்பற்றியது: பெருமை சிலாக்கியம் கொண்டேனா? மனிதர்களுக்குப் பயந்து என் கிரியைகளைத் தகாதவிதமாய்ச் செய்தேனா? விட்டுவிட்டேனா? அது எந்தக் கிரியை? நினைப்பு களிலேயும், ஆசைகளிலேயும் சொற்களிலேயும் கிரியைகளிலேயும் - இருதயப் பரிசுத்தத்தனத்திற்கு விரோதம் செய்தேனா? அது எந்த விடம்? எந்த மனிதரோடு? பொறுமை அற்றுக் கோபங் கொண்டேனா? இந்திரியங்களுக்குத் தகாத சந்தோஷம் வருத்தி, ஒறுப்பு உபவாசத்தில் தவறினேனா? செய்ய வேண்டிய கடமை களைச் சரியாய் அந்தந்தக் காலத்தில் சுறுசுறுப்போடு செய்தேனா? இவை முதலிய குற்றங்கள் தட்டுப்பட்டால் அவைகளை நன்றாய்ச் சிந்தித்துப் பின்வரும் நாளில் அவைகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ளத் தீர்மானித்து கொண்டு உத்தம மனஸ்தாப் மந்திரம் சொல்லித் தேவனிடத்தில் பொறுத்தல் கேட்கிறது.
உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும்.
ஆ சுவாமீ இதோ வெட்கத்தினால் மூடப்பட்டவனாயிருக்கிறேன். நான் என் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு, அவைகளை அருவருத்து விட்டு, அவைகளுக்காக மகா தாழ்ச்சி மனஸ்தாபத் தோடு தேவரீரிடத்தில் பொறுத்தல் சேட்கிறேன். என் துஷ்டத் தனமும் நன்றி கெட்டத் தனமும் பெரிதே. இப்போது நான் அந்தப் பாவங்களை விட்டு விடுகிறேன். அவைகளைக் கட்டிக் கொள்ளும் சமயங்களையும் விட்டகலுவேன்.
சகல நன்மைகளின் ஊருணியாகிய உமக்கு அப்பிரியப்பட எனக்கு நேரிட்டதே கொடுமை. உம்மையன்றி இகத்திலும் பரத்திலும் யார் எனக்கு உதவி? உம்மைப் பகைத்துக் கொள்ள எனக்கு எப்படி மனம் வந்தது? ஆ! நான் மெய்யாகவே பொல்லாதவன். இனி உமது பாதத்தைவிட்டு அகல எனக்கு மனதில்லை சுவாமி. உமது பெருந் தயாளத்தின் படி என்னைக் காப்பாற்றி இரட்சித்தருளும் சுவாமி
ஒ ஆண்டவரே! தேவரீருடைய சொல்லி முடியாத இரக்கம் நிறைந்த திருக்கரத்தில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும், பக்தியையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும், சகல செய்கைகளையும், எனது சரீர ஆத்தும் தாழ்வுகளையும், என் போக்கு வரவுகளையும், என் விசுவாசத்தையும் சம்பாஷணை யையும், என் சீவனின் துவக்கத்தையும் முடிவையும், என் மரணத்தின் நாளையும் நேரத்தையும், தேவரீருடைய நடுத் தீர்வையையும் சகல மோட்சவாசிகளான அர்ச்சியசிஷ்டவர் களோடும் சகல சம்மனசுகளோடும் இளைப்பாறுதலையும், உயிர்த்தெழுந்து வருதலையும் முழு நம்பிக்கையோடு ஒப்புக் கொடுக்கிறேன். ஓ என் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதரே! நான் இது பரியந்தம் உமக்குச் செய்து வந்தது ஒன்றுமில்லையே. பூரண கருத்தோடு இன்று நான் ஆரம்பித்திருக்கும் நற்காரியத்தில் மனவூக்கமிழாமல் என் மரண நாள் பரியந்தம் அதைச் செய்து வரவும் உமது சித்தத்திற்கேற்ப உத்தம் திருப் பணிகளை முடித்துவரவும் செய்தருளும் ஆமென்.
அர்ச். வியாகுலமாதாவின் பிரார்த்தனை
சுவாமீ கிருபையாயிரும், மற்றதும்
வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட அர்ச். மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
பாவம் நிறைந்த இப்பரதேசத்தில் சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய திவ்விய குழந்தையான சேசுநாதர் மாட்டுக் கொட்டிலில் காற்று குளிர் வறுமை முதலியவைகளாற்பட்ட உபத்திரவத்தைக் கொண்டு அளவற்ற துயரமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விருத்தச்சேதனத்தில் திவ்விய குழந்தை சிந்தின இரத்தத் தையும் அனுபவித்த நோக்காடுகளையுங் கண்டழுது துக்கித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதருக்கும் உமக்கும் வரவிருந்த நிர்ப்பந்தங்களை அர்ச். சிமியோன் வெளிப்படுத்தக் கேட்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவாலயத்தில் உம்முடைய திவ்விய குமாரனை தேவ நீதிக்கு உத்தரிப்புப் பலியாக மிகுந்த மனத் துயரோடு ஒப்புக் கொடுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எரோது என்கிற இராசா உம்முடைய நேச பாலகனைக் கொல்லத் தேடுகிறதைக் கேட்டு மனோவாக்குக் கெட்டாத சஞ்சலத்திற்குள்ளான மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ பிதாவின் கட்டளைப்படியே திவ்விய குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்தென்கிற பரதேசத்திற்குப் புறப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்த புறவின இராச்சியத்தில் அநேக வருஷம் திவ்விய பாலகனோடு பரதேசியாய் கஷ்டத்தை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பன்னிரண்டு வயதில் உமது ஆனந்தமாகிய திவ்விய சேசு உம்மைப் பிரிந்து காணாமல் போனதினால் மூன்று நாள் துக்கச் சாகரத்தில் அழுந்தின மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதர் வேதத்தைப் போதிக்கச் சுற்றி வருகையில் அநேகமுறை பாவிகளான யூதர் அவரை நிந்தித்துத் தூஷித்த தினால் மட்டற்ற வியாகுலமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதர் பாடுபடப்போவதற்கு உம்மை உத்தரவு கேட்டுக் கொள்ளுகையில் ஆத்துமம் பிரிந்தாற் போல் துக்க வேதனைக்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதர் பூங்காவனத்தில் துக்க மிகுதியால் இரத்த வேர்வை வேர்த்து மரண அவஸ்தைப்பட்டதைக் கேட்டு மனம் இளகிப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திவ்விய கர்த்தர் ஒரு கள்ளனைப் போலப் பாவிகளால் பிடிபட்டுச் சங்கிலி கயிறுகளால் கட்டவும் சீடர்களால் கைவிடவும் பட்டதை அறிந்து திரளான கண்ணீர்விட்டழுத மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய மாசற்ற குமாரன் அன்னாஸ், கைப்பாஸ் என்கிற பிரதான ஆசாரியர் வீட்டில் பொய் சாட்சிகளால் குற்றஞ் சாட்டவும் சாவுக்கு நியமிக்கவும் பட்டதைக் கேட்டுத் தயங்கிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திவ்விய நாதர் நீச ஊழியர்களால் திருக் கன்னத்தில் அடிக்கவும் திரு முகத்தில் துப்பவும் இராத்திரி முழுவதும் சகலவித நிந்தை அவமான கொடுமையுடன் வாதிக்கவும் பட்டதினால் அளவிறந்த துயரப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிலாத்து மாசற்ற நாதரைப் பரபாஸ் என்கிற கொலைப் பாதகத் திருடனோடே ஒரே வரிசையாகக் காண்பிக்க, யூதர் பாதகனை விடுதலையாக்கி நாதரைக் கொல்லக் கூவினதால் அகோர துக்கத்தால் மனம் நொந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நாதர் கற்றூணில் கட்டுண்டு கொடிய சேவகரால் பட்ட அடியெல்லாம் உமது இருதயத்தில் பட்டாற்போல் வேதனை அனுபலித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அடியால் உம்முடைய நேச சேசுவின் திருத் தசை தெறிக்க திரு இரத்தம் வெள்ளமாய் ஓடத் திரு மேனியெல்லாம் ஏக காயமானதைக் கண்டு இருதயம் பிளந்து விம்மிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கர்த்தருடைய திருச் சிரசில் முள்முடி வைத்து அமுக்கவும் மூங்கிற்றடியால் அடிக்கவும் எப்பக்கத்திலும் முட்கள் தைத்திறங்கவும் அவைகளின் வழியாகச் சிந்தின இரத்தத்தால் திரு முகமும் தாடியும் நனையவும் கண்டு வியாகுல முட்களால் இருதயத்தில் குத்தப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய ஏக நேசனைச் சிலுவையில் அறைய வேண்டும் மென்கிற அநியாய தீர்வையைக் கேட்டு வியாகுல அம்பினால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மகா அவமானத்தோடு உம்முடைய திவ்விய சுதன் திரளான சனங்கள் சூழப் பாரமான சிலுவையைச் சுமந்து வருகிறதைக் கண்டிரங்கிப் பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஒரு செம்மறியைப் போல கொலைக் களத்திற்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்ட உம்முடைய நேச குமாரனைத் துக்கித்துப் பின் சென்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துஷ்ட சேவகர் திவ்விய சேசுவின் காயங்களோடு ஒட்டியிருந்த வஸ்திரங்களைத் தோல் உரிக்கிறாற் போல் உரிக்கக் கண்டு ஏங்கின மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அவரைச் சிலுவையில் அறைகிற சத்தத்ததைக் கேட்டு வியாகுல மிகுதியால் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய நேச குமாரன் இரு கள்ளருக்கு நடுவே உயர்ந்த சிலுவையில் ஸ்தாபிக்கவும் திரளான சனங்களால் காணவும் நிந்தித்துத் தூஷிக்கவும் பட்டதைப் பார்த்து மனம் உருகிக் கண்ணீர் வெள்ளமாய் சொரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசு நாதர் ஒரு சாமம் சிலுவையில் கொடூர நிர்ப்பந்தங் களுடனே தொங்குகிறதைக் கண்டு வியாகுலத்தால் அவரோடே சிலுவையில் அறையுண்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நாதர் தமக்குப் பதிலாய்ச் சீடனான அருளப்பரை உமக்கு மகனாகத் தந்து "என் தேவனே என் தேவனே நீர் என்னைக் கைவிட்டது ஏன் என்ற துயர வசனம் கேட்டுப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய நேச குமாரன் தலை குனிந்து மரிக்கிறதைக் கண்டு உமது உயிர் பிரிந்து போகிறதை விட அதிக வேதனைக்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உயிர் பிரிந்த திவ்விய சேசுவின் விலாவை ஒரு சேவகன் ஈட்டியால் குத்தி திறந்ததைக் கண்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சீடர்கள் சிலுவையினின்று இறக்கின நாதரின் திருச் சரீரத்தை உமது மடியில் வளர்த்தின் போது திருக் காயங்களைத் துயரத்தோடு உற்றுப் பார்த்து முத்தி செய்து திரளான கண்ணீரைச் சொரிந்து பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்முடைய நேச சேசுவின் திருச் சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட போது துக்கத்தில் அமிழ்ந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அவர் அடக்கமான பின்பு தேவரீர் தனிமையில் இருந்த தினாலும் அவருடைய திருப்பாடுகளை இடைவிடாமல் நினைத்த தினாலும் அளவற்ற துக்க வியாகுலத்திற்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வியாகுல மிகுதியால் சகல வேதசாட்சிகளை விட அகோர . வேதனை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சகல உபத்திரவ வியாகுலத்திலும் மாறாத பொறுமையின் உத்தம் மாதிரிகையான மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துன்ப துயரத்தில் அடியோர்களுக்கு அடைக்கலமும் ஆறுதலுமாகிய வியாகுல மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும்
நாங்கள் சேசு கிறிஸ்துவின் வாக்குத் தத்தங்களுக்குப் பாத்திரவான்களாகத் தக்கதாக. மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
கருணைச் சமுத்திரமாகிய திவ்விய சேசுவே தேவரீர் அடியோர்களுக்காகப் பட்ட கணக்கில்லாத கொடூர கஸ்தி நிர்ப்பந்த வேதனைகளுக்கும் மோட்ச இராச்சியத்தில் சுதந்தரித்திக் கொண்ட அளவில்லாத பேரின்ப மகிமை வல்லபத்திற்கும் உம்முடைய நேச திரு மாதாவைப் பங்காளியாக்கத் திருவுள் மானீரே சுவாமீ! தேவரீர் உம்முடைய திருப் பாடுகளையும் நேச மாதாவின் வியாகுலத்தையும் பார்த்து உமது திரு இரத்தத்தின் புண்ணியப் பேறுகளுக்கும் அடியோர்களைப் பங்காளிகளாக்கி உமது பேரின்ப இராச்சியத்தின் ஆனந்த மகிமைக்கு எங்களைப் பார்த்திரவான்களாக்கச் செய்தருளும்.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
வெள்ளிக் கிழமை மாலைச் செபம்
Posted by
Christopher