இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

⛪ திரிகால ஜெபம்.

(திரிகால ஜெபத்தை காலை, பகல், மாலை வேளைகளில் பக்தியாய்ச் சொல்கிற விசுவாசிகள் 10 வருஷ பலன் அடையலாம், அல்லது அவ்வேளைகளில் 5 அருள்நிறை மந்திரம் சொல்லி செபிக்கிறவர்களும் அதே பலனை அடையலாம். மாதம் முழுவதும் சொல்கிறவர்கள் வழக்கமான நிபந்தனை யுடன் (பாவசங்கீர்த்தனம், நன்மை , பாப்புவின் சுகிர்த கருத்துகளுக்காக ஜெபித்தல்) ஒரு பரிபூரண பலனடையலாம் - Raccolta, Veesio Angelica 1943)

(வாரநாட்களில் முழந்தாளில் நின்றபடியும், சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிறு முடிய நின்றுகொண்டும் சொல்லவும்).

ஆண்டவருடைய சம்மனசு மரியாயுடனே விஷேசஞ் சொல்லிற்று...
அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்பிணியானார்.
(அருள்நிறைந்த...)

இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உம்முடைய வார்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.
(அருள்நிறைந்த...)

வார்த்தையானது மாம்சமாகி, எங்களுடனே கூட வாசமாயிருந்தது.
(அருள்நிறைந்த...)

முதல்வர்: சேசுநாதருடைய திருவாக்குத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக,

துணைவர்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வேசுரா சுவாமி, சம்மனசு சொன்னதினாலே, உமக்குக் குமாரனாகிய சேசுகிறீஸ்து மனிதனானதை அறிந்திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகிமையை அடையத்தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணியருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.