வெள்ளிக் கிழமை காலைச் செபம்

பரம திருத்துவத்திற்கு இப்பொழுதும் எப்பொழுதும் எல்லாப் படைப்புக்களாலும் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.

சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக.

அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக.

மெய்யான தேவனும் மெய்யான மனிதருமாகிய சேசு கிறிஸ்துநாதர் ஸ்துதிக்கப்படுவாராக.

சேசுவின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக.

பலி பீடத்தின் மகா பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் சேசுகிறீஸ்து ஸ்துதிக்கப்படுவாராக.

மகா பரிசுத்தத் தேவனின் மகத்துவம் பொருந்திய மாதாவாகிய மரியாள் ஸ்துதிக்கப்படுவாராக.

அவருடைய பரிசுத்தமும் மாசற்றதுமாகிய அவரது உற்பவம் ஸ்துதிக்கக்கடவது.

சர்வேசுரன் தமது சம்மனசுகளிலும் அர்ச்சியசிஷ்டவர்களிலும் ஸ்துதிக்கப்படுவாராக.

நித்திய சர்வேசுரா உம்முடைய சர்வ வல்லபமுள்ள மகத்துவத்துக்கு முன் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கிற அடியேனைப் பாரும். தேவரீரை ஆராதித்து இந்த இராத்திரியில் நீர் எமக்குச் செய்த உபகாரங்களுக்காக நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

தேவரீருடைய திவ்விய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், நீர் எனக்குச் செய்த சகல உபகாரங் களுக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும் பாக்கியமான மரணத்தையும் நித்திய சீவியத்தையும் நான் அடைவதற்காகவும் எனது இத்தினகிரியைகள் வார்த்தைகள் நினைவுகள் எல்லாவற்றையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறேன்.

இதனால் என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அவதிக் குறையவும் பாவிகள் மனந்திரும்பவும் திருச்சபையின் கருத்துகள் பாக்கியமாய் நிறைவேறவும் ஆசிக்கிறேன். இவைகளைச் சேசுநாதருடையவும் தேவ மாதாவினுடையவும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் பேறுபலன்களோடும் திருச்சபையின் பொக்கிஷங்களோடும் ஒன்றாய்ச் சேர்க்கிறேன்.

தேவரீரை மன்றாடுகிற வரப்பிரசாதத்தின் பலமுள்ள உதவியை கொண்டு ஒரு சாவான பாவத்தையோ அற்பப் பாவத்தையோ ஒருக்காலுங் கட்டிக்கொள்ள மாட்டேனென்றும், இந்த நாளின் தனி ஆத்தும் சோதனைக்குப் பின் பிரமாணிக்கமாய் இருப்பேனென்றும் உறுதியான பிரதிக்கினை செய்கிறேன்.

இன்றைக்கு நான் அடையக் கூடுமான சகல பலன்களையும் பெற்றுக் கொள்ளவும் உலகமெங்கும் செய்யப்படப் போகிற சகல திவ்விய பூசைப் பலிகளில் பங்குபெறவும் ஆசையாயிருக்கிறேன்.

நித்திய பிதாவே, உமது உயர்ந்த மகத்துவங்களுக்கும் நான் தேவரீரிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட ஐயகாரங்களுக்குச் சரியாக உமக்கு ஒப்புக் கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை.

நீர் உமது பிரியமெல்லாம் வைத்த உமது அதனையே உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அவர் எங்களுடைய இரட்சணியத்துக்காகக் கொண்ட கசப்பான உன் துன்பங்களையும் வெளித் துன்பங்களையும் அவர் எங்களுக்காக இவ்வுலகில் நடந்த நடைகளையும், செய்த கிரியைகளையும், சொன்ன வார்த்தைகளையும், அன்புள்ள ஆசைகளையும், வணக்கத்துக்குரிய பார்வைகளையும், செய்த செபங்களையும், பிடித்த ஒரு சந்தி உபவாசங்களையும், கண் விழிப்புகளையும் சிந்தின் கண்ணீர்களையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே நாங்கள் உலகத்தைப் பகைத்தவர்களாய் உபாக்கு நல்ல வழியாக செய்வதற்கு வேண்டிய வரப்பிரசாதங்களைத் தந்தருளும். அதற்காகவே எங்கள் இரக்ஷகராகிய சேசுநாதர் கொண்ட திருக் காயங்களையும் சிந்தின் இரத்தத்துளிகள் யாவையும் அவர் செய்த சகல புண்ணியங்களையும் அவர் சீவியத்தின் பேறுகளையும் பட்ட பாடுகளையும் மரணத்தையும் ஒப்புக்கொடுக்கிறேன்.

நான் வெகு பாவங்களைக் கட்டிக் கொண்டேனே சுவாமீ! என்பேரில் தப்பிதம், என் பேரில் தப்பிதம், என் பேரில் கனமான தப்பிதம். நான் உம்மையும் உமது நித்திய இராச்சியத்தையும் சட்டை செய்யாமல் கட்டிக்கொண்ட தோஷ துரோகங்களையும் எல்லாம் உமது திருக்குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய அவர் திருமுகத்தைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள உம்மை மன்றாடுகிறேன்.

எங்களுக்காகத் தேவமாதா அனுபவித்த வியாகுலங்களையும் சகல அர்ச்சியசிஷ்டவர்கள் பட்ட துன்பங்களையும் பார்த்து நாங்கள் நல்ல மரணம் அடையவும் நித்திய மோட்சானந்த பாக்கியங் களுக்குப் பாக்கியவான்களாகவும் தயை செய்தருளும். இக்காலை நேரம் துவக்கி மாலை வரையிலும் யாதோர் பிசகின்றி உமது ஊழியத்திற் பிரமாணிக்கமாயிருக்க எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும்.

ஆண்டவரே மனோ வாக்குக் கெட்டாத இரக்கம் நிறைந்த உமது திருக்கரங்களில் என்னுடைய சரீரம் புத்தி சிந்தனை வாக்குக் கிரியைகளையும் என் சுவாசத்தையும் சம்பாஷணை களையும் என் ஆயுசின் ஓட்டத்தையும் அதன் முடிவையும் என் மரணத்தின் நாளையும் நேரத்தையும் என்னுடைய அவஸ்தை யையும் கையளித்து உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோடு உம்மை வாழ்த்தித் துதிக்கிறேன். ஆமென்.

என் ஆண்டவராகிய யேசுகிறிஸ்துவே என் மரண பரியந்தம் - உம்முடைய பரிசுத்த ஊழியத்திலும் நல்ல காரியத்திலும் நிலை நிற்கவும், கடந்த காலத்தில் செய்த பயனற்ற காரியங்கள் இனி வருங்காலத்திலாவது முழுதும் உமக்குப் பிரியப்படும் காரியங்களைச் செய்ய ஆரம்பிக்கவும் அநுக்கிரகம் பண்ணியருளும். ஆமென்.

காவலான சம்மனசுக்குச் செபம்

ஓ கடவுளானவருடைய சம்மனசானவரே ஏக பிதாவினுடைய கிருபாகடாட்சத்தினாலே உமது பரிசுத்த காவலுக்குள் வைக்கப்பட்டவனாயிருக்கிற என்னை இன்று எல்லா நிலைகளிலும் கிரியைகளிலும் சீர்பெற் நடத்திக் காத்தருளும். ஆமென்.

சர்வேசுரன் நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்து காப்பாற்றி ஆசீர்வதித்து நித்திய பாக்கியத்தில் சேர்ப்பாராக. விசுவாசி களுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன். நமது ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய சமாதானமும் அவருடைய பரிசுத்தப் பாடுகளின் புண்ணியப் பேறுகளும் சம்மனசுக்களின் பாதுகாவலும் சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலும் இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் எங்களோடிருந்து எங்களைப் பாதுகாக்கக் கடவன. ஆமென்.

ஆண்டவரே! சர்வ சக்தியுடைத்தான் தெய்வமே! இதோ நான் சகலமான சிருஷ்டிகளுடைய நாமத்தினாலே உமது தெய்வ மகத்துவத்துக்கு முன் பணிந்து நமஸ்கரிக்கத்தக்கதாக சாஷ்டாங்க மாக விழுந்து கிடக்கிறேன். நானே ஓர் நீசப் பாவியாயிருக்க இதை எப்படி நிறைவேற்றுவேன்?

ஓ! ஆம், அது என்னால் கூடும். நான் அதைச் செய்ய வேண்டியது தான். ஏனென்றால் நீர் இரக்கத்தின் தகப்பனென்றும் அழைக்கப்படுவதில் மகிமை கொள்ளுகிறீர். எங்கள் பேரில் வைத்த பட்சத்தினாலே எங்களுக்காகச் சிலுவையில் மரித்து எங்களுக்காகப் பீடங்களின் பேரில் நிமிடத்துக்கு நிமிடம் பலியைப் புதுப்பித்துக் கொண்டு வருகிற உமது ஏக சுதனை எங்களுக்காகக் கொடுத்தீர்.

ஆகையால் நான் பாவியானாலும் சேசுநாதரிடத்தில் ஐசுவரியமுள்ளவனாகி சம்மனசுக்கள் அர்ச்சியசிஷ்டவர்களுடைய பக்தியோடும் மாசில்லாமல் உற்பவித்து மரியாயின் இருதயத்தின் தாற்பரியங்களோடும் உமது சமூகத்தில் வந்து சகலமான சிருஷ்டிகளுடைய பெயராலே இப்போது செய்யப்படப் போகிற பூசைகளையும் இவ்வுலகத்தின் முடிவு பரியந்தம் செய்யப்படப் போகிற பூசைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

மேலும் உமது வரம்பற்ற தேவ மகத்துவத்துக்கு ஈடான மகிமை நமஸ்காரம் பண்ணவும், உமது கோபாக்கினையை அமர்த்தி கணக்கற்ற எங்கள் பாவங்களுக்காக உமது நீதிக்குப் பரிகாரம் பண்ணவும், நீர் எங்களுக்குச் செய்த உபகாரங்களுக்குச் சரியான நன்றியறிந்த தோத்திரம் பண்ணவும், என் பேரிலும் சகல பாவிகள் பேரிலும் சீவிக்கிறவர்களும் மரிக்கிறவர்களுமாகிய விசுவாசிகள் போரிலும், திருச்சபையின் பேரிலும் விசேஷமாய் அதில் காணப்பட்ட தலைவராகிய அர்ச் பாப்பானவர் பேரிலும் கடைசியாய்ப் பிரிவினைக்காரர்கள் பதிதர்கள் புறவினத்தார் மனந்திரும்பி இரட்சணிய மடைய அவர்கள் பேரிலும் உமது இரக்கம் வரவும், இந்நாளிலும் எந்தச் சமயத்திலும் என் சீவியத்திலும் எந்த நேரங்களிலும் இந்தக் காணிக்கையைப் புதுப்பிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆமென்.

33 மணிச் செபம்.

சேசு நாதருடைய திருப்பாடுகளின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும், மற்றதும்

எங்களுக்காகப் பாடுபட அவதரித்து எழுந்தருளி வந்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிற போது வெளிசங்கைக் குறையையும் மற்றச் சகல இக்கட்டுகளையும் மாறா பொறுமையுடன் அனுபவித்து வந்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அடியோர்களுக்காக அந்த பட்சத்தால் உமது உயிரை ஒப்புக் கொடுத்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய நிற்பந்த மரணத்தின் நினைப்புக்காகத் தேவ நற்கருணையை உண்டாக்கியருளின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தாழ்ச்சியைக் கற்பிக்க உம்முடைய சீடர்களின் பாதங்களைக் கழுவிப் பணிந்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பூங்காவனத்தில் உம்முடைய தேவ பிதாவை நோக்கிச் சாஷ்டாங்கமாய் விழுந்து மன்றாடிப் பிதாவே உமது சித்தத்தின் படியே ஆகட்டுமென்று திருவுளம் பற்றின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதர் பாவத்தால் துக்க சாகரத்தில் அமிழ்ந்தி அவஸ்தைப் பட்டு இரத்த வேர்வை வேர்த்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஒரு சம்மனசுவினால் ஆறுதல் சொல்லப்படத் திருவுளமான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய சீடனாகிய துரோகியால் கன்னத்தில் முத்த மிட்டு முப்பது வெள்ளிக் காசுகளுக்காக உம்முடைய பகையாளி களுக்குக் காட்டிக் கையளிக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஒரு கள்ளனைப் போல கொடிய சேவகரால் மானபங்கமாகக் கயிறு சங்கிலிகளைக் கொண்டு கட்டப்பட்ட மனம் ஒப்பின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய சீடர்கள் முதலிய சகலராலும் கைவிடப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஒரு குற்றவாளியைப் போல ஆசாரியரான அன்னாஸ் கைப்பாஸ் இவர்கள் முன்பாகக் கூட்டிக் கொண்டு போய் விடப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

துஷ்ட சேவகனால் திருக் கன்னத்தில் கொடூரமாய் அறையப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பொய்ச் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பொய்ச் சாட்சிகளுக்கு மறுமொழி சொல்லாமல் மெளன மாயிருந்த சேசுவே, எங் ' நீர் சர்வேசுரனுடைய குமாரனென்று நிச்சயித்ததினால் தேவ தூஷணம் என்று சாவுக்கு நியமிக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சேவகர் ஊழியக்காரர் முதலியவர்களால் அடிக்கவும் திருச் சிரசில் குட்டவும் இரா முழுதும் சகல விதத்திலும் வாதிக்கவும் பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அந்தத் துஷ்டர் கருணை நிறைந்த உம்முடைய கண்களை மூடிக் கன்னத்திலே அறைந்து உன்னை அடித்தவனைக் காட்டு என்றதையும் பொறுமையோடே சகித்துக் கொண்டிருந்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திருமுக மலரில் உமிழப்பட முகம் சுளிக்காத சேசுவே, எங் நிந்தை அவமானங்களினால் பூரிக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அவமானப்படுகையில் ஆச்சரியமான சாந்த குணத்தால் விளங்கின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மும்முறை பயத்தால் தேவரீரை மறுதலித்த இராயப்பரைக் கிருபாகடாட்சத்தோடே நோக்கி மனஸ்தாபத்தால் இளகச் செய்தருளின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரணத் தீர்வைக்குப் பாத்திரவானைப் போல கட்டின் கட்டோடே பிலாத்துவினிடம் ஒப்படைக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பிலாத்து என்கிறவனால் எரோது என்கிற இராசாவின் நீதி மன்றத்துக்கு முன்பாக அனுப்பப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அதிசய மவுனத்தைப் பற்றி ஏரோது என்கிற இராசா வினாலும் அவனுடைய பிரசைகள் சேனைகளினாலும் நிந்திக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பயித்தியம் என்கிற அடையாளமாக நீண்ட வெள்ளைச் சட்டையைத் தரித்துப் பரிகாசம் பண்ணவும் பிலாத்தின் இடத்திற்குத் திரும்ப அனுப்பவும் பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நிந்தை அவமானத்தோடு எருசலேமாநகரத் தெரு வீதிகளில் பலமுறை இழுத்துக் கொண்டு போகவும் திரளான சனங்களால் இகழ்ச்சி செய்யவும் பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரபாஸ் என்கிற கொலைப் பாதகக் கள்ளனோடு ஒரே வரிசையாக நிறுத்திச் சனங்களுக்கு காட்டப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரபாஸ் என்கிறவனை விடுதலை பண்ணச் சொன்ன சனங்களால் சிலுவையில் அறையவும் கொல்லவும் கூவப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கற்றூணோடு கட்டுண்டு சம்மட்டி கசை சாட்டைகளால் மிகவும் கொடூரமாய் அடிபட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அடியால் திருச்சதை கிழிய இரத்தம் வெள்ளமாய் ஓட சர்வாங்கமும் ஏகக் காயமாகிக் குஷ்டரோகி ரூபமான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் அக்கிரம பாவங்களுக்காக அடிகளால் நொறுக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிகாச இராசாவாகத் துஷ்ட சேவகரால் பீற்றலான சிவப்புப் போர்வை அணியவும் மூங்கிலைச் செங்கோலாகத் தரிக்கவும் முண்முடி சூட்டி அடிக்கவும் "இராசாவே வாழ்க" என்றும் நிந்தை கோஷம் வழங்கவும் பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அந்த உருக்கத்திற்குரிய வேஷத்தோடே பிலாத்துவினால் யூத 'சனங்களுக்குக் காட்டி "இதோ மனிதன்" என்று சொல்லப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மிகவும் அந்தமும் ஈனமுமான மரணத் தீர்வைக்கு உள்ளாகத் திருவுளமான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

யூதருடைய குரூர வர்ம முள்ள மரணத்துக்குக் கையளிக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அதிசய தைரிய பொறுமையோடே சிலுவை சுமந்துக் கொண்டு போன சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மிகவும் சாதுவான செம்மறிப் புருவைப் போலே கொலைக் - களத்திற்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்ட சேசுவே, எங் சிலுவையின் பாரத்தால் நொந்து அயர்ந்து வீழ்ந்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்.. சிலுவையில் அறையப் படுவதற்கு உம்முடைய காயத்தோடு ஒட்டியிருந்த வஸ்திரங்கள் உரியப்பட்டதனால் அகோர வேதனையும் மானபங்கத்தையும் அனுபவித்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திருப் பாதங்கள் கொடூர இருப்பாணிகளாலே துளைத்து அறையுண்டு இரு கள்ளர் நடுவில் சிலுவை உயர்த்தப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சிலுவையில் மூன்று மணி நேரம் ஒரு ஆறுதலும் இல்லாமல் நிகரில்லாத வாதைகளை அனுபவித்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சிலுவையில் யூதர்களின் பரிகாசத்திற்கும் வழியே போகிறவர் களுடைய பரிகாசத்திற்கும் உள்ளான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பாவக்களுக்காக இந்தப் பலியான ச்ேசுவே, எங் பாதகர்களோடே சமமாக்கப்டாட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மை வதைத்துக் கொலைப்படுத்தின டர்கையாளர்களுக்காக உம்முடைய தேவ பிதாவை வேண்டிக் கொண்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது இடப் பக்கத்தில் சிலுவையில் அறையுண்ட துஷ்ட கள்ளனால் தூஷிக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனஸ்தாபப்பட்ட கள்ளனை நோக்கி "இன்றே நம்மோடு பரகதியில் இருப்பாய் என்று திருவுளம் பற்றின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்முடைய நேச தாயாரைப் பிரிய சீடனுக்கு மாதாவாகக் கையளித்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மனிதர் ஈடேற்ற ஆசையைக் குறித்துத் தாகமாயிருக்கிறேன்" என்று கூப்பிட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தாகத்திற்கு பிச்சோடே கலந்த புளித்த இரசாங் கொடுக்கப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மிகுந்த துக்கத் துயரத்தோடே உம்முடைய தேவ பிதாவை நோக்கி "என் தேவனே என்னைக் கைவிட்டது ஏன்" என்று 'கூப்பிட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சிலுவை மரண பரியந்தம் கீழ்ப்படிந்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவரீரைக் குறித்து வேதாகமங்களில் எழுதப்பட்டதெல்லாம் நிறைவேறினதைப் பார்த்து "எல்லாம் நிறைவேறிற்று" என்று திருவுளம் பற்றின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

"பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆவியைக் கையளிக்கிறேன்" என்று ஒப்புக் கொடுத்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

திரு விழிகள் மறைந்து திருத்தலை குனிந்து உயிர் நீத்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களுக்காக மட்டற்ற அன்பினால் சிலுவையில் மரித்த சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரித்த வேளையில் அநேக அற்புதங்களால் உமது தெய்வீக வல்லமையை விளங்கச் செய்தருளின சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரித்தப் பின் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட உமது திரு விலாவினின்று அற்புதமாகத் திரு உதிரமும் தண்ணீரும் சொரியக் திருவுளமான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.-

சிலுவையில் நின்று இறக்கப்பட்டு வியாகுலம் நிறைந்த உமது திரு மாதாவின் மடியில் வளர்த்தப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விலைமதிப்புள்ள . சுகந்த பரிமள தைலத்தால் பூசி மெல்லிய பரிவட்டத்தால் மூடிப் புதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மூன்றாம் நாள் மரணத்தைச் செயித்து உயிர்த்தெழுந்தருளின் சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நாற்பதாம் நாள் பரலோகத்திற்கு உடலோடு எழுந்தருளின் சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பேரிலுள்ள மாறாத பட்சத்தின் அடையாளமாக உமது திருக் காயங்கள் இப்போதைக்கும் எப்போதைக்கும் உமது திருச் சரீரத்தில் பதிந்திருக்கச் சித்தமான சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அந்தத் திருக் காயங்களை உம்முடைய தேவை இரவுக்குக் காண்பித்து எங்களுக்காக அவரை எந்நேரமும் மன்றாடுகிற மத்தியஸ்தராகிய சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி

சகல பொல்லாப்புகளிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

சகல பாவங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

உம்முடைய கோபத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

தேவரீருடைய துக்கக் கண்ணீரையும் இரத்த வேர்வையையும் தேவரீர் துக்க நிற்பந்தப் பாடுகளையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

துர்மரணத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

நித்திய ஆக்கினையிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

பசாசினுடைய சகல தந்திரங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

ஆங்காரம் மோகம் போன்ற பாவ துர்க்க குணங்களிலேயிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

தேவரீர் ஏவுகின்ற தரும் விசாரங்களை அசட்டை செய்கின்ற துர்க்குணங்களிலேயிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

புத்திக் குருட்டாட்டத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

கல்நெஞ்சத்தனத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

பஞ்சம் படை நோய் முதலிய ஆக்கினையிலேயிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

நிற்பந்த பாடுகளைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

மரண மட்டும் பிதாவுக்கு கீழ்ப்படிந்த ஆச்சரியமான தாழ்ச்சி பொறுமையைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

தேவரீருடைய திரு மரணத்தையும் அடக்கத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தையும் ஆச்சரியமான ஆரோகணத்தையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

நடுத்தீர்வை நாளிலே, எங்களை இரட்சித்துக் கொள்ளுஞ் சுவாமி.

பாவிகளாய் இருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களை இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் பாவங்களைப் பொறுத்து எங்களை இரட்சித்தருள் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உம்முடைய இஸ்பிரீத்து சாந்துவின் இஷ்டப் பிரசாதத்தை எங்களிடத்திலிருந்து மறுபடி வாங்கிக் கொள்ளாதபடிக்குத் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களை உமது தயையுள்ள சமூகத்திலிருந்து தள்ளி விடாமல் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நாங்கள் ஒருபோதும் உம்மை விட்டு பிரியாத படிக்குத் தயவு செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களுக்கு மெய்யான மனஸ்தாபத்தையும் தாழ்ச்சி சரீரவொறுத்தலும் செபத் தியானப் புத்தியையும் தந்தருள் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உமது திருச்சபையை ஆண்டு பாதுகாத்தருள வேண்டும் மென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சகல சனங்களுக்கும் உமது வேதத்தின் உண்மையையும் சுகிர்த நன்மைத் தனத்தையும் விளங்கச் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உமது சத்திய வேதம் பரவச் செய்வதற்கு வேண்டிய சற்குருக்களை அனுப்பி அவர்கள் பிரயாசங்களுக்கு அனுகூல உதவி செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் நினைவு ஆசை எப்போதும் பரலோக நன்மைகளை நோக்கியிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களுடைய ஆத்துமங்களையும் நித்திய ஆக்கினையிலிருந்து இரட்சிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களை மோட்ச வாசிகளின் உன்னத மகிமைக்குப் பங்காளிகளாக்க வேண்டு மென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய சீவியத்தைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் வேண்டுதலைக் கேட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய சுதனே தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும்

ஆண்டவரே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும், எங்கள் அபயக் குரல் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம். 

சொல்லிலடங்காத நிற்பந்தங்களுக்கும் கடின மரணத்திற்கும் உள்ளாகத் திருவுளமான சேசுவே! தேவரீர் பட்ட இத்தனைப் பாடுகள் எல்லாம் அடியோர்களுக்கு வியர்த்தமாய்ப் போக வொட்டாமல் அவற்றின் பலனை எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

ஆமென்.