பரலோகம் பூலோகம் பாதாளம் எனப்பட்ட எந்த உலகங்களிலும் அடங்காமல் சர்வ நன்மைச் சம்பூரணராய் எங்கும் நிறைந்திருக்கின்ற பிதாச் சுதன் இ,ஸ்பிரித்து சாந்து என்னும் பரம திரித்துவ ஏக தேவனாகிய தேவரீரை வணங்கி நமஸ்கரிக்கிறோம்.
திரிகாலச் செபம் செபிக்கவும், பர.அருள் விசுவாச மந்திரம்.
நீதியுள்ளதுமாய் உன்னதமுமாய் நேசிக்கத்தக்கதுமாயிருக்கிற சர்வேசுரனுடைய திருச் சித்தமானது எல்லாக் காரியங்களிலும் நிறைவேறவும், துதிக்கப்படவும் என்றென்றைக்கும் மேன்மையாய் வாழ்த்தப்படவும் கடவதாக.
ஓ நித்திய கடவுளே ! சர்வ வல்லபரே! தேவரீருடைய மகிமை பரலோகத்தின் மேலும் அடங்கத்தக்கதல்லவே. இதோ தேவரீருடைய இரக்கம் நிறைந்த பாதாரவிந்தத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கும் அபாத்திரவானாகிய உமது அடியானைக் கடைக்கண்ணால் பார்த்தருளும்.
நான் அதிக வணக்கத்துடன் சர்வ சக்தியுடைய ஆண்டவரிடத்திலும் அவருடைய மகா பரிசுத்த கன்னித்தாயாரிடத்திலும் பரிசுத்த சம்மனசுகள் அர்ச்சியசிஷ்ட வர்களிடத்திலும் மோட்ச வாசிகளிடத்திலும் சிந்தனை வாக்கு கிரியைகளால் கட்டிக் கொண்ட கொடூர பாவங்களைச் சங்கீர்த்தனம் செய்கிறேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே (இன்று நீ வழுவி உன் சிந்தனை வாக்கு கிரியையால் கட்டிக் கொண்ட பாவங்களை சிந்தை செய்) இப்பாவங் களுக்காகவும் இன்னும் நான் கட்டிக் கொண்ட மற்றெல்லாப் பாவங்களுக்காகவும் நான் என் சிந்தனையினாலும் வாக்கினாலும் கிரியையினாலும் தேவரீருடைய மகிமை பொருந்திய திருப் பார்வையை விரோதித்து தேவரீருடைய கோபாக்கினியை என்பேரில் திருப்பிக்கொண்டபடியினாலும் மகா உருக்கத்தோடு மனம் நொந்து அழுது கஸ்திப்படுகிறேன்.
தங்களைத் தாங்களே தவத்தால் ஒடுக்கிப் பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்படத் தீர்மானித்து அப்படியே செய்கிறவர்களின் பாவத்தை மன்னிப் பதாகத் தேவரீர் உமது பட்சத்தின் மிகுதியால் வெளிப்படுத்தி இருக்கிறீரே! ஆகையால் நான் என் மனச்சாட்சிக்கு விரோதமாய்க் கட்டிக் கொண்ட பாவங்களையெல்லாம் தேவரீரிடத்தில் வெளி யரங்கமாய் எடுத்துக்காட்டிச் சரியான மனஸ்தாபத்தோடு தேவரீருக்கு என் நல்ல ஆசைகளைக் காணிக்கையாய் ஒப்புக் கொடுக்கிறேன் (இப்போதே சில செபங்களை செபித்துக் கொள்ளவும், கட்டளையாக ஒரு புண்ணியத்தைச் செய்யவும் தீர்மானம் செய்து கொண்டேன்)
ஆண்டவரே நான் செய்த பாவங்கள் என்னை பரம காரியத் திற்கு நம்பிக்கை வைக்க துணிவு கொடுக்கவில்லையே. தேவரீர் மகா தயாளத்தால் எங்களுக்கு ஒரு இரட்சகரையும் மத்தியஸ் தரையும் தந்தீர். இவர் எங்களுக்காகச் சொல்லி முடியாத துன்பங்களை அனுபவித்து சிலுவை மரத்தில் அறையுண்டு திரு இரத்த வெள்ளத்தைச் சொரிந்து உயிர் விட்டுப் பரலோகத்திலே தேவரீருடைய பரிசுத்த நீதிஸ்தலத்திலிருந்து எங்களுக்காகப் பரிந்து பேசி எங்களை என்றென்றைக்கும் இரட்சிக்க ஏற்பட்டிருப்பதால் அவர் மூலம் பாவிகளாகிய எங்களுக்கு நித்திய இளைப்பாற்றி கிடைக்கும்படிச் செய்திருக்கிறீரே!
சேசுகிறீஸ்துநாதருடைய மத்தியஸ்தத்தினாலும் சகல அர்ச்சியசிஷ்டவர்களின் வேண்டும் தலினாலும் நான் தேவரீரிடத்தில் இரக்கத்தையும் தயையையும் பெற எனக்கு நியாயமுண்டு; சிறந்த மகிமைப் பொருந்திய பரலோக பூலோக ஆண்டவரே என் பேரில் இரக்கம் வைத்து, என் பாவங் களை மன்னித்து, வான் வீட்டில் நித்திய சீவனை அடையச் செய்தருளும். சர்வ வல்லமையும் கிருபையும் நிறைந்த ஆண்டவர் என் பாவங்களுக்குத் தக்க உத்தம மனஸ்தாபத்தைக் கட்டளையிட்டு எனக்குப் பாவ விமோசனம் அளிக்கக்கடவது. ஆமென்.
மேலும் நான் இன்று என் பலவீனத்தால் உள்ளாகக் கூடுமாயிருந்த அநேக ஆபத்து துன்ப சோதனைகளிலிருந்து என்னைக் காத்து இரட்சிக்கிறதுக்காக மிக்க நன்றியறிந்த தோத்திரம் புரிகிறேன். ஓ என் ஆண்டவரே! தேவரீர் தான் என் சிருஷ்டிகர், பட்சமுள்ள என் பாதுகாவலர், என் சீவியத்தின் முடிவானவர், என் இயற்கையின் மேலான சம்பூரணார்.
ஆகையால் தேவரீர் திரு முகத்தில் பாய்கிற சதாகால சந்தோஷத்தின் சோதிப்பிரகாசத்தைக் கொண்டு, நான் உமது திரு இறக்கையின் நிழலில் நித்திய இளைப்பாற்றி அடையச் செய்தருளும். தேவரீருக்குச் சகல ஜீவ ராசிகளும் எப்போதும் கீழ்படிந்து துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் செய்யக்கடவது.
நாங்கள் பகல் பொழுதில் உழைக்கவும் இராக்காலத்தில் இளைப்பாற நித்திரை செய்யவும் தேவரீர் ஏற்படுத்தி இருக்கிற படியால், இன்றிரவு என்னைத் தேவரீருடைய கண்காணிப்பான பாதுகாவலில் வைத்துக்கொள்ளத் தேவரீரை மன்றாடுகிறேன். நான் இனிமேல் தேவரீருடைய திருப்பணிகளைச் செய்யவும் தேவரீருக்கு விசுவாசத்தோடு நன்றி செலுத்தவும் இப்பொழுது மிதமான நித்திரை செய்யவும் பாவ சோதனை ஆபத்து துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் உமது திருவுளச் செயலின் விதி என்னைக் காக்கவும், உமது பரிசுக்த சம்மனசுகள் என்னைச் சுற்றிக் கொண்டு கண் விழிப்பாயிருக்கவும் செய்தருளும்.
தேவரீர் அப்படிச் சித்தம் கூர்ந்தால் நான் நாளுக்கு நாள் என் பாவங்களை ஒழித்துப் புதிய செயங்களை அடைந்து தேவரீருடைய பரிசுத்த கற்பனைகளைச் சம்பூரண மாய் அனுசரித்துத் தெய்வ பயத்தில் விருத்தியாகி உமக்கு நல்ல ஊழியம் செய்வேன்.... ஆமென்.
கிருபை தயாளம் நிறைந்த வருமாய் எங்கள் நேச வணக்கத்திற்குரியவரு மாயிருக்கிற பிதாப்பிதாவாகிய அர்ச் சூசையப்பரே தேவரீரை மன்றாடி தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி உம்மிடத்தில் நான் இரந்து கேட்டதை அடையாமற் போனதில்லையென்று அர்ச். தெரேசம்மாள் நிச்சயித்ததாக நினைத்தருளும். என் அன்புள்ள தகப்பனாரே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு நான் உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன்; பெருமூச்செறிந்து அழுது பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்திற்கு காத்துக் கொண்டு உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாய் விழுகிறேன். மிகவும் இரக்கமுள்ள பிதாப்பிதாவாகிய அர்ச் சூசையப்பரே, குறையும் தகுதியுமற்ற என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயபபரராய்க் கேட்டு கிருபை புரிந்தருளும்,
ஐம்பத்து மூன்றுமணிச் செபம், மற்றதும்
அர்ச். சவேரியார் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்... மற்றதும்
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச் இஞ்ஞாசியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச் இஞ்ஞாசியாருக்குச் இணையான தகுதியும் பிரியமுமுள்ள ஞானப் புத்திரனாகிய அர்ச் சவேரியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிந்து தேசங்களுக்கு அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச், பாப்பானவருடைய விசேஷ தூதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நித்திய சமாதானத்திற்குரிய சுவிசேஷத்தைப் போதித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வ நன்மையுள்ள சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புற இனத்தாருக்கும் அரசர்களுக்கும் சேசுநாதருடைய திருநாம சுதந்திரத்தைப் பொழியத் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ இஷ்டப்பிரசாதம் நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திருச்சபையின் மேலான மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விசுவாசத்தை காப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விசுவாசமின்மையை மிகவும் வெறுத்து நீக்குகிறவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுவிசேஷ சத்தியத்தின் உத்தம பிரசங்கியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பசாசினுடைய விக்கிரகங்களை அழித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ தோத்திர வணக்கம் பரவச் செய்வதற்கு எத்தனமாக நித்திய பிதாவினாலே தெரிந்து கொள்ளப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதரைக் கண் டுபாவித்து பிரமாணிக்கமாய் பின்சென்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இஸ்பீரித்து சாந்துவின் தொனியுள்ள எக்காளமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய திருச்சபையின் வச்சிரத் தூணே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புறவினத்தார் சத்திய நெறியில் திரும்புவதற்கு எத்தனமாகிய பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விசுவாசிகளின் போதகரான சற்குருவே, எங்க மெய்யான பக்தியின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சாங்கோபாங்கப் புண்ணிய நெறியில் தவறான வழிகாட்டியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அப்போஸ்தலர்களுக்குரிய ஞானத்திற்கும் அர்ச்சியசிஷ்ட தனத்திற்கும் உத்தம மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குருடருக்குப் பார்வை கொடுப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சப்பாணிகளின் ஊனந்தீர்ப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பஞ்சம் படை நோயில் ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பசாசுகளை ஜெயித்தோட்டுபவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிலுவையால் சத்துருக்கள் படையைத் துரத்தினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மரித்தவர்களை உயிர்ப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சமுத்திரத்தையும் புயலையும் கீழ்ப்படுத்தி அடக்க வல்லமை பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கடலும் மற்றப் பூதங்களும் உமது கட்டளைக்கு அடங்கிப் பணியப் பேறு பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அதிசயமான அற்புதங்களைச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நல்ல மரணம் அடைவதற்கு உதவியாயிருப்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தரித்திரர்களுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சிந்து தேசத்தின் பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அட்சயமான ஆலயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசு சபையின் சிறப்புள்ள அலங்காரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மன விருப்பத்துடன் மிகவும் தரித்திரராயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மாறாத கற்புடைத்தானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
குறைவற்ற பொறுமைச் சிரவணமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அத்தியந்த தாழ்ச்சியுடன் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆச்சரியமான தயையுள்ள பிரசன்னரானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுநாதருடைய சிலுவைக்கும் கடினமான பாடுகளுக்கும், மிகவும் ஆசைப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிறர் சிநேக சாங்கோபாங்கத்தை அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிறர் ஈடேற்றத்திற்காக எந்நேரமும் வெகு ஆவலாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவதோத்திரத்திற்கும் மனிதர் ஆத்தும் நன்மைக்கும் அத்தியந்த பற்றுதலும் சுறுசுறுப்புமுள்ளவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமாக்களில் அநேகருடைய அவதியைத் தீர்க்க மிகவும் உதவியானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுகிர்த குணத்தினாலும் பரிசுத்த நடத்தையினாலும் சம்மனசு போலத் தோன்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவசிநேகத்தாலும் சர்வேசுரனுடைய திருச் சனத்தை நடத்தின் பராமரிக்கையாலும் பிதாப்பிதாவென்னத்தக்கவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ வரத்தாலும் ஞானத்தாலும் தீர்க்கதரிசியே, எங்க - நாமத்தினாலும் பேறுகளாலும் அப்போஸ்தலரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சகல பாஷைகளிலும் புறவின மக்களுக்குச் சத்தியத்தைத் தெரிவித்த வேத போதகரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசு கிறீஸ்துவைப் பின்பற்றி உயிரைத் தரத் துணிந்த ஆசையால் வேதசாட்சியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுகிர்த தவவொழுக்க நடத்தையால் ஸ்துதியாரே, எங்க ஆத்துமத்திலும் சரீரத்திலும் பரிசுத்த விரத்தரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவ கிருபாகடாட்சத்தால் சகல அர்ச்சிஷ்டவர்களுடைய புண்ணியங்களிலும் விளங்கினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும்
சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக, அர்ச். சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுரா சுவாமீ! முத்திப்பேறு பெற்ற சவேரியாருடைய ஞானப் போதகத்தினாலேயும் அவர் செய்த அற்புதங்களினாலேயும் சிந்து தேசத்திலுள்ள சனங்களைத் தேவரீருடைய திருச்சபையிலே அழைத்து உட்படுத்தச் சித்தமானீரே, அவருடைய நல்ல புண்ணியப் பலன்களை துதித்து வணங்குகிற நாங்கள் அவருடைய உகிர்த மாதிரிகைகளை அனுசரிக்க அனுக்கிரகஞ் செய்தருளும், இந்த மன்றாட்டுகளை எல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
வியாழக்கிழமை மாலைச் செபம்
Posted by
Christopher