சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு ஆரோகணமானதைத் தியானிப்போமாக.

பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சூரியன் ஏற்கெனவே உயரத் தில் இருக்கிறது. அப்போஸ்தலர்களின் குரல்களைக் கேட்க முடிகிறது. சேசுவும் மாதாவும் ஒருவர் மற்றவருக்கு முன்னால் நின்று, ஒருவரை யொருவர் பார்க்கிறார்கள். சேசு தம் கரங்களை விரித்து, தம் மாதா வைத்தம் நெஞ்சோடு அரவணைக்கிறார்.... ஓ! அவர் உண்மையாகவே ஒரு மனிதராக, ஒரு ஸ்திரீயின் சுதனாக இருக்கிறார்! இந்தப் பிரியா விடையைக் கவனிப்பதே இதை நம்புவதற்குப் போதுமானது! நேசத் திற்குரிய தாய்க்கு மகன் தரும் முத்த மழையில் சிநேகம் பொங்கி வழிகின்றது. சிநேகமானது நேசத்திற்குரிய சுதனை முத்தங்களால் மூடுகிறது. முத்தங்களுக்கிடையே பரஸ்பர ஆசீர்வாதங்களின் வார்த் தைகள் சொல்லப்படுகின்றன... ஓ! அவர் மெய்யாகவே தமக்குப் பிறப்பளித்தவர்களை விட்டுப் பிரிகிற மனுமகன்தான்! அவர்கள் மெய்யாகவே மிகப் பரிசுத்த தாய்க்கு நேசத்தின் அடையாளமா யிருக்கிற தன் குழந்தையை, பிதாவுக்குத் திருப்பித் தரும்படியாக, அவரைத் தம்மிடமிருந்து விலக்குகிற தாய்தான்! சர்வேசுரனுடைய மாதாவை முத்தமிடுகிற சர்வேசுரன்!.....

இறுதியாக, சிருஷ்டியாக இருக்கிற ஸ்திரீ, தம் சுதனாகவும் இருக் கிற கடவுளின் பாதங்களண்டையில் முழந்தாளிடுகிறார்கள். கடவு ளாய் இருக்கிற அவர்களது திருச்சுதன், நித்தியத்திற்கும் நேசிக்கப் பட்டவர்களாயிருக்கிற திவ்ய கன்னி மாதாவின் திருச்சிரசின் மீது தம் கரங்களை விரித்து, பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவின் நாமத்தினாலே அவர்களை ஆசீர்வதிக்கிறார். அதன்பின் அவர் குனிந்து, இன்னும் மிக இளமையாகத் தோன்றும் அவர்களது பொன்னிறமான கேசத்துக் கடியில், லீலி மலரின் ஓர் இதழைப் போல் வெண்மையாயிருக்கிற அவர்களுடைய நெற்றியில் தமது கடைசி முத்தத்தைத் தந்து அவர்களைத் தூக்குகிறார்.

கடந்த காலப் பிரியாவிடைகளின் துயரங்களிலிருந்தும், கொல்லப் பட்டிருந்தவரும், கல்லறையில் தனியாக விடப்பட்டிருந்தவருமாகிய தனது திருச்சுதனுக்கு தாய் அளித்த பிரியாவிடையின் வாதையிலிருந் தும் இந்தப் பிரியாவிடை எவ்வளவு வேறுபட்டுள்ளது!..... இந்தப் பிரியாவிடையில், தங்கள் நேசத்துக்குரியவர்களை விட்டுப் பிரிகிறவர் களின் இயற்கையான கண்ணீரால் அவர்களுடைய கண்கள் பளபளத்துக் கொண்டிருந்தாலும், இந்த நேசத்திற்குரியவர் தமது மகிமைக்குத் தகுதியுள்ள வாசஸ்தலத்திற்குப் போகிறார் என்று அறிவதின் மகிழ்ச்சியால் மாதாவின் இதழ்கள் புன்னகைக்கின்றன....

... "ஆண்டவரே, இன்று நீர் ஆசீர்வதிக்கப்போவதாக உமது தாயிடம் கூறினீரே. அவர்கள் எல்லாரும், அங்கே, அந்த மலைக்கும் பெத்தானிக்கும் இடையில் இருக்கிறார்கள்'' என்கிறார் இராயப்பர்.

''சரி. இப்போது நாம் அவர்களிடம் போவோம். ஆனால் முதலில் வாருங்கள். மீண்டும் ஒரு முறை உங்கள் எல்லாரோடும் நான் அப்பத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.''

பத்து நாட்களுக்கு முன், இரண்டாம் மாதத்தின் பதினான்காம் நாள் இராப்போஜனத்தின் போது பெண்கள் இருந்த அறைக்குள் அவர்கள் போகிறார்கள். அது வரையில் மாதா, சேசுவோடு சேர்ந்து வருகிறார்கள். அதன்பின் அவர்கள் பிரிந்து போகிறார்கள். சேசு பதினொருவரோடு தனித்திருக்கிறார்.

மேஜையின் மேல் கொஞ்சம் பொறித்த இறைச்சியும், கொஞ்சம் பாற்கட்டியும், சின்ன கறுப்பு ஒலிவக்காய்களும், ஒரு சிறிய பாத்திரத் தில் திராட்சை இரசமும், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீ ரும், சில அகலமான அப்பங்களும் இருக்கின்றன. முக்கியமான திருநாளுக் காக ஏற்பாடு செய்யப்பட்டதாக இல்லாமல், சிறிது உணவு உண்ணும் தேவைக்காக மட்டும் ஆயத்தம் செய்யப்பட்டுள்ள எளிய மேஜை.

சேசு ஒப்புக்கொடுத்துவிட்டு, பகுதிகளாக உணவுகளைப் பிரிக் கிறார். அவர் இராயப்பருக்கும், அல்பேயுஸின் யாகப்பருக்கும் நடுவே இருக்கிறார். அவரே அந்த இடங்களுக்கு அவர்களை அழைத்திருக் கிறார். அருளப்பரும், அல்பேயுஸின் யூதாவும், யாகப்பரும் அவருக்கு முன்னால் இருக்கிறார்கள். தோமையாரும், பிலிப்புவும், மத்தேயுவும் அவருக்கு ஒரு புறமும், பிலவேந்திரரும், பர்தலோமேயுவும், தீவிர சீமோனும் மறுபுறமும் இருக்கிறார்கள். எனவே எல்லோரும் சேசுவைப் பார்க்க முடிகிறது. ஒரு விரைவான, அமைதியான உணவு. சேசுவுடன் தங்கள் கடைசி நாளில் இருக்கும் அப்போஸ்தலர்கள், என்னதான் உயிர்ப்பு தொடங்கி அடுத்தடுத்து குழுவாகவும், தனி யாகவும் நிகழ்ந்த காட்சிகள் அன்பால் நிறைந்தவையாக இருந்திருக் கிற போதிலும், உயிர்த்தெழுந்த சேசுவோடு தங்கள் சந்திப்புகளுக்கே உரியதாக இருந்த அந்த ஒதுக்கமான மனநிலையிலிருந்தும், வணக்க உணர்விலிருந்தும் ஒருபோதும் வெளிவரவேயில்லை.

உணவு முடிந்துவிட்டது..... அவர்களை அரவணைப்பதற்காக அவர் எழுந்து நிற்கிறார். அவர்கள் அவரைக் கண்டு பாவிக்கிறார்கள். தெய்வீக மான முறையில் சேசு புன்னகைக்கிறபோது அவர்கள் அழுகிறார்கள்.

அவர்கள் எல்லோரும் நிலைகுலைந்து போகிறார்கள். அருளப்பர், சேசு வின் மார்பில் சாய்ந்து கொண்டு, தமது நெஞ்சை வெடிக்கச் செய்வது போன்ற கடுமையான கேவுதல்களால் அசைக்கப்பட்டு, அனைவரின் ஆசைகளையும் அறிந்தவராக, அவர்கள் சார்பாக, " உமது திவ்ய அப்பம் இந்த வேளையில் எங்களைப் பலப்படுத்தும்படி, அதையாவது எங்களுக்குத் தாரும்" என்று கேட்கிறார்.

"அப்படியே ஆகட்டும்!" என்று சேசு பதில் சொல்கிறார். ஓர் அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு, ஒப்புக்கொடுத்து, ஆசீர்வதித்த பின், தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கிறார். அதன்பின் திராட்சை இரசத்திற்கும் அவ்வாறே செய்கிறார். திரு இரத்தக் கிண்ணத்தைக் கீழே வைத்த பின், "இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று சொல்லி விட்டு : "நீங்கள் என்னோடு மோட்சத்தில் இருக்கப் போகும் காலம் வரை நான் எப்போதும் உங்களோடு இருக்கும்படி, என் அன்பின் இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் நினைவாக இதைச் செய்யுங்கள்' என்றும் சொல்கிறார். அவர் அவர்களை ஆசீர் வதித்து, "இப்போது நாம் போவோமாக'' என்கிறார். அவர்கள் அந்த அறை இருக்கிற அந்த வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.....

யோனாவும், மேரியும், மாற்குவும் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் சேசுவை ஆராதித்தபடி முழந்தாளிடுகிறார்கள். ''சமாதானம் உங்க ளோடு நிலைத்திருப்பதாக. நீங்கள் எனக்குத் தந்துள்ள காரியத்திற்காக, ஆண்டவர் உங்களுக்கு வெகுமானமளிப்பாராக'' என்று சொல்லி, அவர்களைக் கடந்துபோகும் போதே அவர்களை ஆசீர்வதிக்கிறார் சேசு.

மாற்கு எழுந்து நின்று: "ஆண்டவரே, பெத்தானி சாலையோர முள்ள ஒலிவத்தோப்புகள், உமக்காகக் காத்திருக்கும் சீடர்களால் நிரம்பியிருக்கின்றன' என்கிறார். சேசு அவரிடம் : "போய் கலிலேய ரின் வயலுக்குச் செல்லும்படி அவர்களுக்குச் சொல்'' என்கிறார். உடனே மாற்கு, முழு வேகத்தோடு அம்பெனப் பாய்ந்து செல்கிறார். "அப்படியானால், அவர்கள் எல்லோருமே வந்திருக்கிறார்கள்'' என்று அப்போஸ்தலர்கள் ஒருவருக்கொருவர் சொல்கிறார்கள்.

இன்னும் சற்றுத் தூரத்தில் மார்ஸியமுக்கும், கிளேயோப்பா மேரிக்கும் நடுவே அமர்ந்திருக்கிறார்கள் ஆண்டவரின் திருமாதா.

அவர் வருவதைக் கண்டு அவர்கள் எழுந்து நிற்கிறார்கள். தனது தாயுடையவும், விசுவாசியுடையவும் இருதயத்தின் சகல துடிப்புகளோடும் அவரை வழிபடுகிறார்கள்.

சேசு தமக்கு அதிகப் பிரியமுள்ளவர்களோடு, ஒலிவ மலையின் உச்சியை நோக்கி மேலேறிச் செல்கிறபோது, அவரைச் சுற்றி நூற்றுக் கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது இரண்டு திருநாட்களின் நடுவில், இந்தக் கால கட்டத்தில் கூடாரங்கள் எதுவும் இல்லாதிருக்கிற கலிலேயரின் வயலை அவர் வந்தடைகிறபோது, தம் சீடர்களிடம் : "மக்களை அவர்கள் இருக்கிற இடங்களிலேயே நிறுத் துங்கள், அதன்பின் என் பிறகே வாருங்கள்'' என்கிறார்.

அவர் இன்னும் உயரமாக, ஜெருசலேமைவிட பெத்தானிக்கு அதிகம் அருகில் இருக்கிற மலையின் உச்சி வரை ஏறிச் செல்கிறார். அச்சிகரம் பெத்தானியின் மீது மேலிருந்து ஆதிக்கம் செலுத்துகிறது. அவருக்கு அருகில் அவருடைய தாயும், அப்போஸ்தலர்களும், லாசரும், இடையர்களும், மார்ஸியமும் இருக்கிறார்கள். இன்னும் சற்றுத் தொலைவில், ஓர் அரை வட்டமாக, மக்களைத் தடுத்து நிறுத் தும்படி, மற்ற சீடர்கள் இருக்கிறார்கள்.

சேசு சற்று நீட்டிக் கொண்டிருக்கிற ஒரு பெரிய கல்லின் மேல் நின்று கொண்டிருக்கிறார். அவர் சூரியனால் மிகப் பிரகாசமாக ஒளிர் விக்கப்படுகிறார். அது அவரது ஆடையை பனியைப் போலவும், அவரது தலைமுடியை பொன்னைப் போலவும் ஒளிவீசச் செய்கிறது. அவருடைய கண்கள் ஒரு தெய்வீக ஒளியால் மின்னுகின்றன. ஓர் அரவணைப்பின் அடையாளமாக அவர் தம் கரங்களை விரிக்கிறார். பூமியின் மக்கட்கூட்டங்கள் முழுவதையும் தம் நெஞ்சோடு சேர்த் தணைத்துக்கொள்ள அவர் விரும்புவது போலத் தோன்றுகிறது. அவற் றின் பிரதிநிதிகளைத்தான் அவருடைய ஆத்துமம், தம்முன் இருக்கிற கூட்டத்தில் காண்கிறது. தமது மறக்க முடியாத, ஈடிணையற்ற குரலில் அவர் தம் இறுதிக் கட்டளையைத் தருகிறார்: "செல்லுங்கள்! உலகின் எல்லைகள் வரையிலும் மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என் நாமத்தினால் செல்லுங்கள். கடவுள் உங்களோடு இருப்பாராக. அவருடைய சிநேகமானவர் உங்களைத் தேற்றுவாராக. அவருடைய ஒளியானவர் உங்களை வழிநடத்துவாராக. நீங்கள் நித்திய ஜீவியத்தை அடையும் வரை அவரது சமாதானம் உங்களில் வாசம் செய்வதாக.''

அவர் அழகில் மறுரூபமாகிறார். பேரழகாயிருக்கிறார்! தாபோரில் இருந்ததைவிட எவ்வளவோ அதிகம் அழகாக இருக்கிறார். அவர்கள் எல்லோரும் அவரை ஆராதித்தபடி முழந்தாளில் விழுகிறார்கள். தாம் நின்று கொண்டிருந்த கல்லிலிருந்து ஏற்கனவே அவர் மேலெழும்பி யிருக்கிற அதே வேளையில் தம் திருமாதாவின் முகத்தை அவர் தேடு கிறார். அவருடைய புன்னகை, எந்த மனிதனாலும் ஒருபோதும் விவரிக்க முடியாத ஒரு வல்லமையைப் பெறுகிறது .... அதுவே அவரது மாதா வுக்கு அவரது பிரியாவிடையின் இறுதி வாழ்த்தாக இருக்கிறது. அவர் உயருகிறார், உயருகிறார்... இப்போது எந்த இலைகளும், ஒரு மெல்லிய இலை கூட தனது கதிர்களைத் தடுக்காததால், அவரை முத்தமிடுவதில் அதிக சுதந்திரமாக இருக்கிற சூரியன், தமது மகா பரிசுத்த திருச்சரீரத் துடன் மோட்சத்திற்கு எழுந்தருளுகிற கடவுள் - மனிதனை தனது பேரொளியால் பிரகாசிப்பிக்கிறது. அது உயிருள்ள மாணிக்கங்களைப் போலப் பிரகாசிக்கிற அவருடைய மகிமையுள்ள திருக்காயங்களை வெளிக்காட்டுகிறது. எஞ்சியது ஒளியின் முத்துப்போன்ற புன்னகை யாக இருக்கிறது. அது மெய்யாகவே, கிறீஸ்துமஸ் இரவில் இருந்தது போலவே, இந்தக் கடைசி வேளையிலும், தான் இருக்கிறபடி தன்னை வெளிப்படுத்துகிற ஒளியேதான். சிருஷ்டிப்பானது, ஆரோகண மாகிச் செல்கிற கிறீஸ்துவின் ஒளியில் மின்னித் துலங்குகிறது. சூரிய ஒளியை மிஞ்சும் ஒளி. மனித சுபாவத்திற்கு மேலான, அதிபேரானந்த மான ஒளி. மோட்சத்திற்கு ஏறிச் செல்கிற ஒளியைச் சந்திக்கும்படி அங்கிருந்து இறங்கி வருகிற ஒளி..... கடவுளின் வார்த்தையான சேசு நாதர் இந்த ஒளிப் பிரவாகப் பெருங்கடலில் மனிதருடைய பார்வை யிலிருந்து மறைகிறார்.....

பூமியின் மீது, அந்தப் பரவசப்படும் கூட்டத்தின் ஆழ்ந்த அமைதி யில் இரண்டு சத்தங்கள் மட்டும் கேட்கின்றன : ஒன்று, அவர் மறை கிறபோது அவரது திருமாதாவின் "சேசு'' என்ற கதறல்; மற்றொன்று ஈசாக்கின் அழுகுரல். மற்றவர்கள் வேத அதிசயிப்பினால் வாயடைத் துப் போயிருக்கிறார்கள். மனித வடிவத்தில் இரு பனி வெண்மையான சம்மனசுக்கொத்த ஒளிகள் தோன்றி, சுவிசேஷகர் நடபடியாகமத்தின் முதல் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளைச் (அப். நடபடி 1:10, 11) சொல்லும் வரையில், அவர்கள் காத்திருப்பவர் களைப்போல, அப்படியே இருக்கிறார்கள்.