சேசுநாதர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறையின் காவலர்கள் களைத்தும், குளிர்ந்தும், தூக்கமயக்கத்தோடும், பலவித மான தோற்ற நிலைகளில் கல்லறையைக் காவல் காத்துக் கொண் டிருக்கிறார்கள். அதை மூடியிருந்த கல், ஏதோ அணை கொடுக்கப் பயன்படும் தாங்குசுவர் போல் அதன் வட்ட விளிம்பில் நல்ல பருமனாக சுண்ணாம்பால் பூசப்பட்டுள்ளது. அதன் ஒளி ஊடுருவ முடியாத வெண்பரப்பின் மீது தேவாலய முத்திரையின் சிவப்பு மெழுகிலான பெரிய ரோஜாச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த முத்திரை இன்னும் வேறு சில முத்திரைகளோடு, நேரடியாக சுண்ணாம் பின்மீது, அது ஈரமாயிருக்கும் பாதே பதிக்கப்பட்டிருக்கிறது.
காவலர்கள் இரவின் போது ஒரு சிறிய நெருப்பைப் பற்ற வைத் திருந்திருக்க வேண்டும். தரையில் சாம்பலும், பாதி எரிந்த விறகுக் குச்சிகளும் கிடக்கின்றன. அவர்கள் அங்கு விளையாடிக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் சுற்றிலும் உணவு மீதங்களும், சுத்தமான சிறு எலும்புத் துண்டுகளும் கிடக் கின்றன. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு விளையாட்டுக்குப் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும், நமது சதுரங்கம், அல்லது நம் பிள்ளை களின் கோலி விளையாட்டுப் போல. அதன்பின் அவர்கள் களைத்துப்போய், தூங்கவோ, அல்லது காவல் காக்கவோ கூடக்குறைய வசதி யாக சாய அல்லது இருக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
தெளிந்த வானத்தில், கிழக்குப் பக்கமாக இப்போது முழுவதும் ரோஸ் நிறத்திலான ஒரு பகுதி காணப்படுகிறது. அது மேலும் மேலும் விரிந்து அகன்று கொண்டே வருகிறது. ஆனாலும், அங்கே இதுவரை சூரியக்கதிர்கள் எதுவும் காணப்படவில்லை. இதோ, அங்கே ஒரு மிகப் பிரகாசமான எரிநட்சத்திரம் தோன்றுகிறது. அது அறியப்படாத ஆழங்களிலிருந்து எழுந்துவருகிறது. தாங்கமுடியாத ஒளிப் பிரவாகத் தைக் கொண்ட ஒரு நெருப்புக் கோளத்தைப் போல அது கீழிறங்கி வருகிறது. சுடர்வீசுகிற ஒரு ஒளித்தடத்தால் அது பின்தொடரப் படுகிறது. அது ஒருவேளை நம் விழித்திரைகளில் அதன் பிரகாசம் இன்னும் அதிக நேரம் நிலைத்திருப்பதன் விளைவாக மட்டுமே இருக்க லாம். மிக அதிக வேகத்தில் அது பூமியை நோக்கி இறங்கி வருகிறது. எத்தகைய தீவிரமான அற்புத உருவெளித் தோற்ற ஒளி வெள்ளத்தை அது வீசுகிறது என்றால், அது தன் அழகில் அச்சுறுத்துவதாக இருக் கிறது. எந்த அளவுக்கென்றால், விடியற்காலையின் ரோஸ் நிற வெளிச்சம் மறைந்து போகிறது. இத்தகைய வெண்சுடரின் அடர்த்தியில் அது மங்கிப் போகிறது.
காவலர்கள் அதிசயித்தவர்களாக, தலைகளை உயர்த்துகிறார்கள். ஏனென்றால் அந்த ஒளியோடு பலமான, இணக்கமான, பிரமிப்பூட்டு கிற ஒரு முழக்கமும் கேட்கிறது. அது தன் கர்ச்சனையால் சிருஷ்டிப்பு முழுவதையும் நிரப்புகிறது. பரலோக நித்திய சிகரங்களிலிருந்து அது வருகிறது. அதுவே தமது மகிமையான திருச்சரீரத்திற்குத் திரும்பி வருகிற கிறீஸ்துநாதரின் ஆத்துமத்தைத் தொடர்ந்து வரும் அல்லே லூயாவாக, சம்மனசுக்களின் மகிமையொலியாக இருக்கிறது.
அந்த எரிநட்சத்திரம் பரிசுத்த கல்லறையின் பயனற்ற கல்மூடி யின் மீது மோதி, அதைப் பிளந்து, தரையில் வீசுகிறது. அது பிரபஞ்சத் தின் பேரரசருக்கு சிறைக்காவலர்களாக வைக்கப்பட்டிருந்த காவலர் களைக் கொடிய திகிலாலும், பேரோசையாலும் தாக்கி அவர்களைச் செத்தவர்களைப் போலாக்குகிறது. ஆண்டவரின் ஆத்துமம் பூமி யிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, தான் ஏற்படுத்திய நில நடுக்கத்தைப் போலவே, அது பூமிக்குத் திரும்பி வருகிற இச்சமயத்திலும் புதிதான ஒரு நிலநடுக்கத்தை உண்டாக்குகிறது. அந்த எரிநட்சத்திரம் இப்போது இருண்டு கிடக்கிற பரிசுத்த கல்லறைக்குள் நுழைந்ததும், அதன் உட்பகுதி வருணிக்க முடியாத ஒளியால் முழுப் பிரகாசமடை கிறது. அந்த எரிநட்சத்திரம் காற்றுவெளியில் அந்தரத்தில் நிற்க, அடக்கக் கட்டுக்களின் கீழ் அசைவின்றி இருக்கிற சரீரத்தோடு ஆத்துமம் மீண்டும் தானாகவே ஒன்றுகலக்கிறது.
இவை எல்லாமும் ஒரு நிமிடத்தில் அல்ல, நிமிடத்தின் ஒரு பகுதி யில் நடக்கிறது. சர்வேசுரனுடைய ஒளியின் தோற்றமும், இறக்கமும், ஊடுருவலும், மறைதலும் அவ்வளவு வேகமாயிருக்கின்றன.
தேவ இஸ்பிரீத்து, குளிர்ந்திருக்கிற தன் சரீரத்திடம் சொல்கிற ''நான் விரும்புகிறேன்' என்ற வார்த்தை , சத்தமின்றி இருக்கிறது. அது தேவ பொருண்மையினால், அசைவற்றிருக்கிற சடப்பொருளிடம் சொல்லப்படுகிறது. ஆனாலும் மனித செவிகளால் எந்த வார்த்தையும் உணரப்படவில்லை. மாமிசம் கட்டளையைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அதற்குக் கீழ்ப்படிகிறது.
திருச்சிரசை மூடியிருந்த துகிலுக்கும், நீள்செவ்வக மூடுதுகிலுக் கும் கீழே, மகிமையான சரீரம் நித்திய அழகில் மீண்டும் ஒழுங்கு படுத்தப்படுகிறது. அது தன் மரண உறக்கத்திலிருந்து விழித்தெழு கிறது. தானிருந்த "ஒன்றுமில்லாமையில் இருந்து திரும்பி வருகிறது. அது இறந்திருந்த பின் உயிர்வாழ்கிறது. இருதயம் நிச்சயமாக விழித் தெழுந்து தன் முதல் துடிப்பைத் தருகிறது. அது இரத்தக் குழாய் களுக்குள் எஞ்சியுள்ள இரத்தத்தை உந்தித் தள்ளுகிறது. மேலும் ஒரே சமயத்தில் வெறுமையாயிருந்த இரத்த நாடிகள் அனைத்திலும், அசையாதிருந்த நுரையீரல்களிலும், இருண்ட மூளையிலும் புது இரத்தத்தை அது முழுமையான அளவில் சிருஷ்டித்து, வெப்பத் தையும், சரீர ஆரோக்கியத்தையும் பலத்தையும், நினைவையும் திரும்பக் கொண்டு வருகிறது.
மற்றொரு கணம் கடந்து போகிறது. இதோ அந்தக் கனத்த மூடு துகிலுக்குக் கீழ் ஒரு திடீர் அசைவு ஏற்படுகிறது. எந்த அளவுக்கு அது திடீரென்று நிகழ்கிறது என்றால், அவர் ஒரு கணம் நிச்சயமாக மடக்கி வைக்கப்பட்டிருந்த தம் கரங்களை அசைக்கிறார். அடுத்த கணம் அவர் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறார். அதிகார தோரணை யோடு இருக்கிறார். சடப்பொருள் அல்லாத மூலப் பொருளாலான தமது ஆடையில் ஒளிவீசித் துலங்குகிறார். சுபாவத்திற்கு மேற்பட்ட விதமாக அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கிறார். அவரை மாற்று வதும், உயர்த்துவதும், ஆயினும் அவரைத் துல்லியமாக அவராகவே இருக்க விடுகிறதுமான ஒரு கண்ணியத்தோடு காணப்படுகிறார். இந்த மாற்றத்தைக் கண்டுபிடிக்க, அதைக் காண்கிற கண்ணுக்கு போதிய அவகாசம் இல்லை. இப்போது அது அவரைக் கண்டு பிரமிப்படை கிறது. மனத்தின் ஞாபகத்தில் இருக்கிற தோற்றத்திலிருந்து அவர் மிகவும் மாறுபட்டிருக்கிறார். அவரது தோற்றம் மிக நேர்த்தியான தாக்கப்பட்டுள்ளது. அதில் காயங்களோ, இரத்தமோ இல்லை. மாறாக ஐந்து காயங்களிலிருந்து பாய்ந்தோடி வருவதும், அவரது தோலின் ஒவ்வொரு துவாரங்களிலிருந்தும் வெளிப்படுவதுமான ஒளியினால் அவர் பிரகாசிக்கிறதுதான் நிகழ்கிறது.
அவர் முதல் எட்டு எடுத்து வைக்கும் போது - அவருடைய கரங் களிலிருந்தும், பாதங்களிலிருந்தும் வெளிவருகிற ஒளிக்கதிர்கள் அவரைச் சூழ்ந்துகொள்கின்றன; அவருடைய திருச்சிரசு ஓர் ஒளி மாலையால் சூழப்பட்டிருக்கிறது. அந்த ஒளிமாலை, அவருடைய முள் முடியின் எண்ணற்ற சிறு காயங்களால் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்பொழுது அவை இரத்தம் சிந்தவில்லை. மாறாக, சுடர்வீசுகின்றன. தமது குறு அங்கியின் விளிம்பு வரை தம் நெஞ்சின் மீது மடித்து வைக்கப்பட்டிருந்த கரங்களை அவர் விரிக்கும் போது, மிகப் பிரகாச மான ஒளிப்பிரதேசத்தை அவர் திறந்து காட்டுகிறார். அவருடைய குறு அங்கியின் வழியாக வெளியே வருகிற அந்த ஒளி, அவரது இருதயத்தின் மட்டத்தில் ஒரு சூரியனைப் போல அந்தக் குறு அங்கி யைப் பற்றியெரியும் ஒளிப்பிழம்பாகத் தோன்றச் செய்கிறது - எனவே உண்மையில் “ஒளிதான்" ஒரு சரீரத்தை எடுத்துக் கொண் டுள்ளது. அந்த ஒளி, இந்த பூமியின் எளிய ஒளி அல்ல, நட்சத்திரங் களின் சோகையான ஒளி அல்ல, சூரியனின் பரிதாபமான ஒளியும் அல்ல. மாறாக அது சர்வேசுரனுடைய ஒளி : அவருடைய ஒரே இருத்தலில் ஒன்றாகத் திரண்டு, தனது கற்பனைக்கெட்டாத, தெளிந்த நீல ஒளியை அவருக்குக் கண்களாகவும், தனது பொன்னிறமான நெருப்பை அவருக்குக் கேசமாகவும், தனது சம்மனசுக்கொத்த வெண் மையை அவருக்கு ஆடையாகவும், நிறமாகவும், மற்றும் அவரிடம் இருக்கிற அனைத்துமாகவும் தருகிறது. ஆனால் மனித வார்த்தைகளால் அதை விவரிக்க முடியாது. தனது பேரார்வமுள்ள வல்லமையால், பரலோகத்திலுள்ள ஒவ்வொரு நெருப்பையும் மங்கிப்போகச் செய்து, நித்திய காலத்தின் ஒவ்வொரு கணத்திலும் அவரை மீண்டும் ஜெனிப்பிக்கும்படியாக அவரைத் தனக்குள் கிரகித்துக்கொள்கிற மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் பரிபூரணவுன்னதப் பெருவெப்பச் சுடர், அவருடைய இரத்தத்தை ஈர்த்து, அதைப் பரவச்செய்கிற பரலோகத்தின் இருதயம், அவருடைய சடத்தன்மையற்ற பரம் இரகசியத் திரு இரத்தத்தின் ஒவ்வொரு துளியுமாக இருக்கிற முத்திப்பேறு பெற்ற ஆத்துமங்கள், சம்மனசுக்கள், கடவுளின் அன்பு, கடவுள் மீதுள்ள அன்பு ஆகிய மோட்சத்தில் உள்ள சகலமும் சேர்ந் திருக்கிற ஒளியாக அது இருக்கிறது. அதுவே உயிர்த்தெழுந்த கிறீஸ்து வுக்கு உருவம் தருவதாக இருக்கிறது.
அவர் வாசலை நோக்கி வரும்போது, அவரது பிரகாசத்திற்கு அப்பால் இரண்டு அதியற்புத அழகுள்ள ஒளிப் பிழம்புகள் கண்ணால் காணக்கூடியவையாக எனக்குத் தோன்றுகின்றன. அவை சூரியனோடு ஒப்பிடும்போது நட்சத்திரங்களைப் போல ஆண்டவர் முன்பாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று வாசலின் ஒரு புறத்திலும், மற்றொன்று மறுபுறத்திலும் இருக்கின்றன. தமது ஒளியால் சூழப் பட்டு, தமது புன்னகையால் பேரின்பத்தை வழங்கியபடி தங்களைக் கடந்து செல்கிற தங்கள் சர்வேசுரனை அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிறார்கள். அவர் தமது கல்லறைக் கெபியிலிருந்து வெளிவரு கிறார். பூமியின் மீது மீண்டும் நடமாடும்படி அங்கே திரும்பிச் செல் கிறார். அப்போது பூமி மகிழ்ச்சியால் விழித்தெழுந்து, தனது பனித் துளிகளிலும், செடி கொடிகள், ரோஜாத் தோட்டங்களின் பல வண்ணங் களிலும், தங்களை முத்தமிடும் அதிகாலைச் சூரியனுக்கும், தங்களுக்குக் கீழே நடந்து செல்கிற நித்திய சூரியனுக்கும் திறக்கிற ஆப்பிள் மரங்களின் கணக்கற்ற அல்லி வட்டங்களிலும் பிரகாசிக்கிறது. பிரபஞ்சத்தின் பரிசுத்தமான வல்லமைகள் - மலர்கள், தாவரங்கள், பறவைகள் - தமது சொந்த மகிமைப்பிரதாபத்தின் ஒளி வட்டத் தினுள்ளும், சூரிய ஒளியின் ஒளிவட்டத்தினுள்ளும் கடந்து செல்கிற வல்லபரைக் கண்டு வியந்து போற்றி ஸ்துதிக்கின்றன.
மலர்களின் மீதும், காய்ந்த கிளைகளின் மீதும் தங்குவதும், தெளிந்த வானத்தை நிமிர்ந்து பார்ப்பதுமாகிய அவரது புன்னகையாலும், அவரது கண்களாலும், எல்லாமுமே இன்னும் அதிக அழகாகின்றன ஒரு ரோஜா மலர்ப்பாத்தியை விடவும் அதிக மென்மையும், நிறங் களும் கொண்ட கோடிக்கணக்கான மலரிதழ்களால் உருவாக்கப் படுகிற மலர்களின் நுரை ஒன்று வெற்றி வீரரின் சிரசின் மீது காணப் படுகிறது. பனித்துளி வைரங்கள் அதிகப் பிரகாசமாயிருக்கின்றன. ஆகாயம் அவரது சுடரொளி வீசுகிற கண்களைப் பிரதிபலித்து அதிக ஆழ்ந்த நீல நிறமாயிருக்கிறது. சூரியனும் சந்தோஷமாயிருக்கிறது. தோட்டங்களிலிருந்து திருடப்பட்ட வாசனைகளோடும், பட்டுப் போன்ற பூவிதழ்களின் மெல்லிய வருடல்களோடும் தனது அரசரை முத்தமிட வருகிற ஒரு மென்மையான காற்றால் விலக்கப்படுகிற ஒரு சிறிய மேகத்தின் மேல் சூரியன் மகிழ்ச்சியோடு வர்ணம் பூசுகிறது.
சேசு தம் கரங்களை உயர்த்தி அவைகளை ஆசீர்வதிக்கிறார். அதன்பின், பறவைகள் இன்னும் அதிக சத்தமாக பாடிக்கொண்டும், காற்று தன் வாசனைகளைச் சுமந்து சென்று கொண்டும் இருக்கும் போதே, அவர் என் பார்வையிலிருந்து மறைகிறார். வருத்தம், துன்பங்கள்,
றின் மிக மிகச் சிறிய நினைவையும் கூட நாளைக் கென விலக்கி வைக்கிற ஒரு மகிழ்ச்சியில் அவர் என்னை விட்டுச் செல்கிறார்...