பத்துக் கற்பனைகளும், திருச்சபைக் கட்டளைகளும்

1. பத்துக் கற்பனைகளைக் கூறு.

(1) உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே. நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.

(2) சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.

(3) சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாக அனுசரிக்க மறவாதிருப்பாயாக.

(4) பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.

(5) கொலை செய்யாதிருப்பாயாக.

(6) மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக.

(7) களவு செய்யாதிருப்பாயாக.

(8) பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

(9) பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.

(10) பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும். முதலாவது, எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிக்கிறது. இரண்டாவது, தன்னைத் தானே நேசிக்கிறது போல பிறரையும் நேசிக்கிறது.


2. திருச்சபைக் கட்டளைகள் யாவை?

(1) ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.

(2) வருஷத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

(3) பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்கிறது.

(4) வெள்ளிக் கிழமை முதலிய சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும் ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.

(5) விலக்கப் பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவுமுறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

(6) நம் ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.


3. இந்தியாவில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும் கடன் திருநாட்கள் :

(1) கிறீஸ்து பிறப்பு விழா (டிசம்பர் 25)

(2) சேசுநாதரின் பரலோக ஆரோகணத் திருநாள் (உயிர்த்த நாற்பதாம் நாள்)

(3) திவ்ய நற்கருணைத் திருநாள்.

(4) பரிசுத்த கன்னி மாமரியின் பரலோக ஆரோகணத் திருநாள். (ஆகஸ்ட் 15)