திருநாட்கள் கொண்டாடப்பட வேண்டிய விதம்

ஆடை அலங்காரங்கள் என்ன, விலையுயர்ந்த செண்ட் பாட்டில், பாடி ஸ்ப்ரே என்ன, ஜோடனைகள் என்ன, தடபுடலான விருந்தென்ன, மதுவும், மற்ற உல்லாசங்களும் என்ன, இவைதான் நம் திருநாட்களின் அடையாளங்களாக ஆகியிருக்கின்றன.

ஆன்மா பாவசங்கீர்த்தனத்தால் சுத்திகரிக்கப்படுவதையும், திவ்ய நன்மையாலும், ஜெபம், தவம், பரித்தியாகத்தாலும், தியானத்தாலும் நித்திய ஜீவியத்திற்கென அலங்கரிக்கப்படுவதையும் கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் மறந்தே போய்விட்டனர்.

திருநாளுக்குரிய அர்ச்சியசிஷ்டவரை மகிமைப்படுத்துவதும், அவர்களது புண்ணியங்களைக் கண்டு பாவிக்கத் தூண்டுவதும், ஆன்மாக்கள் சுத்திகரிக்கப்படுவதுமே திருச்சபை திருநாட்களைக் கொண்டாடுவதற்கான காரணங்களாக இருக்கின்றன.

ஆடை அணிமணிகளும், விருந்தும் தவறல்ல - பாவசங்கீர்த்தனம் செய்து, பூசை கண்டு, திவ்ய நன்மை உட்கொண்டு, இவ்வாறு திருநாளை அர்ச்சித்த பின் இவை அந்தரங்க மகிழ்ச்சியின் வெளி அடையாளங்களாக இருக்கும்பட்சத்தில்!