சப்பரம் தூக்குதல், கும்பிடு சரணம், அசனம், திருயாத்திரைகள்

திருநாளன்று ஆன்மா பற்றிய எந்தக் கவலையுமின்றி குடி, கூத்துகளில் பகல் முழுவதையும் கழித்து விட்டு, மாலையில் மாதாவின் சப்பரத்தைத் தூக்குவதால் ஆத்துமத்திற்கு என்ன பயன்?

பாவத்தில் வாழ்வைக் கழித்த ஒரு பெண் சப்பரத்திற்கு முன்னால் வந்து, கும்பிடு சரணம் என்ற பெயரில் விழுந்து எழுந்தபின், மீண்டும் தன் பழைய பாவ வாழ்வுக்குத் திரும்பிப் போவாள் என்றால், இந்த சம்பிரதாயங்களால் யாருக்கு என்ன பயன்?

மாறாக, ஆன்ம அழகோடும் பக்தியோடும் இவற்றைச் செய்ய அவர்கள் முன் வருவார்கள் என்றால், உங்கள் ஆன்மாக்களுக்கு அவை எத்தகைய நன்மையாக இருக்கும்!

பாவத்தோடு கால் கடுக்க வேகாத வெயிலில் மாதாவின் சேத்திரத்திற்கு நீ நடையாத்திரை போவதால் சேசுவையும் மாதாவையும் மகிழ்விக்க உன்னால் முடியுமா?

எனவே, உன் நற்செயல்கள் அனைத்தையும் தேவ இஷ்டப்பிரசாத நிலையில் செய்யக் கருத்தாயிரு. அப்போது உன்னைப் பற்றி மகிழ்ச்சியடையும் சேசு இவ்வுலகிலும் மறுவுலகிலும் தம்மையே உன் ஆத்துமத்துக்கு சம்பாவனையாகத் தருவார்.