பெற்றோரின் கடமைகள்!

திருமணத் தம்பதியர் திருமணத்தின் முதல் நோக்கமாகிய குழந்தைப் பேற்றை முறையாக அனுசரிக்க வேண்டும், கருத்தடை கருச்சிதைவை அடியோடு விலக்க வேண்டும், ஒருவர் மற்றவரின் ஆன்ம நலனிலும், சரீர நலனிலும் கருத்தாயிருக்க வேண்டும், தங்கள் குழந்தைகளுக்கு உலகக் கல்விக்கு மேலாக மிக இளம் வயதிலேயே ஞான உபதேசம் கற்றுத்தர வேண்டும், அவர்களது ஞான வாழ்வில் அக்கறையாயிருந்து அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

இவை போன்ற அடிப்படைக் கடமைகள் மட்டுமின்றி, காலத்தின் தேவையாக இன்று பல புதிய கடமைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில:

1. தொலைக்காட்சியை முடிந்த வரை அடியோடு தவிர்த்தல்;

2. குழந்தைகள் வலைத்தளம், கைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் கண்காணித்து, கட்டுப்படுத்துதல் கைபேசி குறிப்பாக வாட்ஸப், வலைத்தளம், ஃபேஸ்புக் போன்ற வசதிகள் உள்ள கைபேசிகள் குறைந்தது பள்ளிக் காலம் வரை தேவையில்லை என்பதால், பெருமைக்காக அவற்றை வாங்கித் தராதீர்கள்.

கல்லூரி செல்லும் உங்கள் பெண்களின் மொபைல் தொடர்புகளை கண்காணிப்பதும், போதைப் பொருள் பயன்பாடு பற்றி உங்கள் சிறுவர்களிடம் விழிப்பாயிருப்பதும் அவசியம்.

தொடுதிரை அலைபேசியில் நீங்கள் எல்லா விதமான அசுத்தப் படங்களையும், கதை, கட்டுரைகளையும், பகவத் கீதையையும், குர் ஆனையும் கூட சுமந்து செல்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். விரும்பினால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது பயங்கரமானது.

உங்கள் ஆத்துமத்தைக் காத்துக் கொள்ள உண்மையாகவே விரும்பினால், இந்த பயங்கரக் கருவியை வீசியெறியுங்கள்!

3. வீடுகளில் குழந்தைகள் பயன்படுத்தும் மடிக் கணிணிகளும், மேஜைக் கணிணிகளும் எல்லோரும் எளிதாகப் பார்க்கும் இடத்தில் ஹாலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்குத் தனி அறை தருவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள்.

3. உங்கள் குழந்தைகள் ஞாயிறு பூசையைத் தவறாமல் காண்கிறார்களா, அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்கிறார்களா என்று கண்காணியுங்கள். சிறு வயதிலேயே ஜெபமாலையை தியானித்து ஜெபிக்கக் கற்றுக் கொடுங்கள். அடிக்கடி குழந்தைகளோடு ஆலயம் சென்று நற்கருணை நாதரையும், தேவ அன்னையையும் சந்திக்கும் வழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.

4. உங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டையிடுதல், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகியவற்றைக் தவிர்ப்பது உங்கள் கட்டாயக் கடமை.