161 தூய சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை

 

தூய சவேரியார் பேராலயம்

இடம் : பாளையங்கோட்டை

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு அந்தோணி பாப்புசாமி (மதுரை பேராயர்)

பங்குத்தந்தையர்கள் :

அருட்தந்தை ராஜேஷ்
அருட்தந்தை மாசிலாமணி
அருட்தந்தை அலெக்ஸாண்டர்

ஆன்மீக குரு : அருட்தந்தை லூர்து ராஜ்.

குடும்பங்கள் : 1800
அன்பியங்கள் : 57 (9 மண்டலங்கள்)

துணை பங்குகள் :
1. மணக்காவலம்பிள்ளை நகர்
2. மார்க்கெட், புனித அந்தோணியார் திருத்தலம்
3. ஆரோக்யநாதபுரம்
4. நொச்சிகுளம்
5. ஆச்சிமடம்
6. கோரிப்பள்ளம்
7. வெட்டியபந்தி
8. VM சத்திரம்.

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 07.30 மணி, காலை 11.00 மணி மற்றும் மாலை 06.00 மணி.

திங்கள் முதல் சனி வரை : காலை 05.30 மற்றும் மாலை 06.00 மணிக்கும் திருப்பலி.

திருவிழா : பத்து நாட்கள்
நவம்பர் மாதம் 24 ம் தேதி கொடியேற்றம்
டிசம்பர் மாதம் 03 ம் தேதி தூய சவேரியார் திருவிழா.

வரலாறு :

17 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பாளையங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் எழுப்பப் பட்டிருந்தன.

1644 ம் வருடம் பாளையம் என அழைக்கப் பட்ட பாளையங்கோட்டையில் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய ஆலயம் இருந்தது. இங்கு 70 கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

1838 ம் ஆண்டிலிருந்து, பாளையங்கோட்டை தென் மாவட்டங்களின் கத்தோலிக்க மையமாக உருவாகியது.

மதுரையிலிருந்து வந்த அருட்தந்தையர்கள் மார்ட்டின் மற்றும் லூயிஸ் இக் கத்தோலிக்க மையத்திற்காக அரும்பாடுபட்டு உழைத்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதால், அவர்கள் ஏற்கனவே இருந்த சிற்றாலயத்தை பெரிது படுத்தினர்.

1860 ம் ஆண்டு மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்த காரணத்தினால், புதிய ஆலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு 29 ஜூன் 1863 ல் அன்று அவ்வாலயம் தூய சவேரியாருக்கு அர்ப்பணிக்கப் பட்டது.

சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு 1959 ல் இங்கு கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 8000 -ஆக உயர்ந்ததையடுத்து, அருட்தந்தை V. X அருளானந்தம் அவர்களின் பெரும் முயற்சியால் பழைய ஆலயம் விரிவு படுத்தப்பட்டது.

1973 ம் ஆண்டு பாளையங்கோட்டை புதிய மறை மாவட்டமாக, மதுரை உயர் மறை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, மேதகு இருதயராஜ் ஆண்டகை அவர்கள் பொறுப்பேற்ற போது இவ்வாலயம் பேராலயமாக அறிவிக்கப் பட்டது.

தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதாலும், அனைவரும் ஒன்றிணைந்து இறைவனை வழிபட போதுமான இடவசதி இல்லாததாலும், இவ்வாலயம் இடிக்கப்பட்டு மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது.

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பேராலயத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை அளித்திட அன்புடன் வேண்டுகின்றோம்.

இறைவன் நிறைவாக நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..!

தகவல்கள் சேகரித்து தொகுப்பு : திருத்தொண்டர் லூர்து ஆன்றனி (பாட்னா மறை மாவட்டம்)