நரகத்தைப் பற்றி இன்னும் சில வேதாகம வாக்கியங்கள்: பழைய ஏற்பாடு

“மரணமடைந்து, பூமியின் தூசியிலே நித்திரை செய்கிறவர்களில் அநேகர் நித்திய ஜீவியத்திற்கும், வெகு பேர் நித்திய நிந்தைக்கும் எழுந்திருப்பார்கள்” (தானி.12:2).

“உன் மனதை மிகவும் தாழ்த்து, ஏனெனில் தீய வழியில் நடப்பவனுக்குரிய தண்டனை அக்கினியும் புழுக்களுமே" (சர்வப்.7:19).

"...அப்போது தேகமெடுத்த சகலரும் நம் சமூகம் ஆராதனை செய்ய வருவர் என்கிறார் ஆண்டவர். எருசலேம் நகரிலிருந்து வெளியில் புறப்பட்டு, நமது வேதத் துரோகிகளான மனிதருடைய பிணங்களைப் பார்ப்பார்கள்; அந்தத் துரோகிகளின் அரிபுழு சாகாது, அவர்கள் நெருப்பும் அவியாது, சகல மனிதருக்கும் கண்காட்சியாக எக்காலத்தும் இப்படியே இருப்பார்கள்" (இசை. 66:23,24).

“கொல்லப்படுகிற ஆடுகளைப் போல் பாதாளத்தில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள்; அவர்களைச் சாவு விழுங்கும்... உதவியற்றவர்களாய் நரகத்தில் தங்கள் வீண் பெருமையை இழந்து விடுவார்கள். . . பாவி ஒருபோதும் வெளிச்சத்தைக் காண மாட்டான்” (சங்.48:13,18).

அவர்கள் (அதாவது, மோயீசனுக்கு எதிராகக் கலகம் செய்த தாத்தான், கொறே, அபிரோன் என்பவர்கள்) நின்று கொண்டிருந்த நிலம் பிளந்தது. பூமி தன் வாயைத் திறந்து, அவர்களை... விழுங்கிப் போட்டது. அவர்கள் உயிரோடு பாதாளத்தில் விழுந்தார்கள். பூமி அவர்களை மூடிக் கொண்டது (எண்.16:31-33).

நரகமானது தன் கர்ப்பத்தை விசாலமாய் விரிக்கும்; தன் வாயை மிக அகண்ட விதமாய்த் திறக்கும்; அதிலே வல்லமையுடையவர்களும், சாதாரணப் பிரஜைகளும், இஸ்ராயேலில் மகத்துவமுடையவர்களும் மகிமைப் பிரதாபமுள்ளவர்களும் ஒருங்கே இறங்குவர் (இசை.5:14).

“பயங்கரமான சத்தங்களைக் கேட்டுக் கலங்கினார்கள், கஸ்திக்குரியவைகளைக் கண்டு பயந்து நடுங்கினார்கள். (நரக) அக்கினி எவ்வளவு பலமானதானாலும், அவர்களுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லை ” (ஞான. 17:4,5).

“பாவி தான் செய்த எல்லாப் பாவத்திற்காகவும் ஆக்கினைப் படுவான்; ஆயினும் அழிய மாட்டான். அவன் சம்பாதித்த ஆஸ்திகளின் அளவுக்குத் தக்கபடி வேதனைப்படுவான்... தேவன் அவன்மீது தமது கோபத்தின் உக்கிரத்தை வர விட்டுத் தமது அஸ்திர சாஸ்திரங்களை அவன்மேல் பிரயோகம் பண்ணுவார்... அவனுடைய உள்ளந்தரங்கமெல்லாம் காரிருளால் நிறைந்திருக்கின்றன. தானாய் எரியும் ஒருவித அக்கினி அவனைப் பட்சிக்கும்” (யோப் 20:18, 23, 26).

''தேவன் தம் கோபத்தின் உக்கிரத்தினாலே துன்மார்க்கர்களைக் கண்டித்து வாதிக்கிறார்; அப்பொழுது அவர்கள் காற்றுக்கு முன் துரும்பு போலவும், புயலால் பறக்கடிக்கப்படும் சூடான சாம்பலைப் போலவும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்” (யோப். 21:17,18).
"பாவிகளின் வழி கற்கள் பாவப்பட்டு சமமாயிருக்கிறது, ஆனால் அதன் முடிவில் நரகம், இருள், தண்டனைகள்தான் இருக்கின்றன." (சர்வப். 21:11)

“சர்வ வல்லபரான கர்த்தர் தீர்வை நாளில் அவர்களைத் தண்டித்துப் பழிவாங்குவார். அந்நாளில் அவர் அக்கினி யையும், புழுக்களையும் அவர்கள் உடலிலே அனுப்புவதால் அவர்கள் சதா காலத்திற்கும் எரிந்து வேதனைப்படுவார்கள்” (யூதித்.16:20,21).

"இதோ அவர்களே வைக்கோல் என்பது போல அவர் களை அக்கினி விழுங்கியது. அவர்கள் தங்கள் ஆன்மாவைத் தீயின் உஷ்ணத்தில் நின்று விடுவிக்கமாட்டார்கள்" (இசை . 47:14).

"அவர்களைக் கடிக்கும் புழு ஒருபோதும் சாகாது, அவர்களை உள்ளும் புறமும் சுடுகிற தீ ஒருபோதும் அவியாது; நித்திய நெருப்பின் மத்தியில் சீவிக்கக் கூடியவர்கள் யார்?" (இசை. 33:14).

“தீக்காடானது இரவும் பகலும் அணையாது நிற்கும். அதன் புகை சதா கிளம்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தலைமுறைக்கும் துன்பம் ஒழியாது. யுகங்கள் தோறும் ஒருவனும் அதைக் கடந்து வெளியே வர மாட்டான்” (இசை . 34:10).

“பாவிகளின் பேரில் கண்ணிகளைப் பொழிவார்; அக்கினியும் கந்தகமும் அவர்களுடைய பாத்திரத்தின் பங்காகும்” (சங்.10:7).

“அவர்கள் எல்லோரும் நெருப்பில் கிடக்கும் பித்தளை யும், வெள்ளீயமும், இரும்பும், காரியமுமானார்கள்... வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் அக்கினியில் உருக்கப்படுவது போல, நமது கோப அக்கினியில் உங்களை ஒன்றுசேர்த்து, உருக்கிப் பிரியப்படுவோம். நாம் உங்களைக் கூட்டி, நமது கோப அக்கினியிலே சுட்டெரிப்போம்” (எசேக். 22:18,20).

“நீர் உமது முகத்தை வெளிப்படுத்தும் நாளில், அவர்களை அக்கினிச் சூளையாக்குவீர். ஆண்டவர் தமது கோபத்தில் அவர்களைக் கலங்கடிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்” (சங்.20:9).