நரகத்தைப் பற்றி இன்னும் சில வேதாகம வாக்கியங்கள்: புதிய ஏற்பாடு

“சரீரத்தைக் கொல்லுகிறவர்களாயிருந்தும் ஆத்துமத்தைக் கொல்ல முடியாதவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆனால் ஆத்துமத்தையும் சரீரத்தையும் நரகத்திலே தண்டிக்க வல்லவருக்கே முக்கியமாய்ப் பயப்படுங்க ள்.” (மத்.10:28).

“மனுமகன் தம்முடைய தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவருடைய இராச்சியத்தினின்று, சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்வோரையும் ஒன்றாகச் சேர்த்து, அக்கினிச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” (மத்.13:41,42).

“பிரயோஜனமற்ற இந்த ஊழியனைப் புறம்பான இருளிலே தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பு முண்டாயிருக்கும்” (மத்.25:30).

“சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டகன்று, பசாசுக்கும் அதன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்... என்பார்'' (மத். 25:41, 42).

“இஸ்பிரீத்துசாந்துவுக்கு விரோதமாய்த் தூஷணித்திருப்பவன் என்றென்றைக்கும் மன்னிப்பை அடையாமல் நித்திய பாவக் குற்றவாளியாயிருப்பான்” (மாற்.3:29).

“நீ இருகாலுள்ளவனாய் அவியாத அக்கினி நரகத்தில் தள்ளபடுவதைவிட நொண்டியாய் நித்திய ஜீவியத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்களுடைய புழுவும் சாகாது, அக்கினியும் அவியாது.” 

“அவருடைய சுளகு அவர் கையிலிருக்கிறது; அவர் தமது களத்தைத் தூற்றி, கோதுமையைக் களஞ்சியத்திலே சேர்த்துக்கொள்வார்; பதர்களை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்” (லூக்.3:17).

“ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், கொடியைப் போல புறம்பே எறியப்பட்டு, உலர்ந்து போவான். அவனைச் சேர்த்தெடுத்து, அக்கினியில் போடுவார்கள், அவனும் எரிவான்” (அரு.15:6).

"தேவதூதர்கள்... நீதிமான்கள் நடுவிலிருந்து தீயோரைப் பிரித்து, இவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்" (மத்.13:49,50; 13:41,42).

“எல்லாப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவது போல, எவனும் அக்கினியால் உப்பிடப்படுவான்" (மாற். 9:47,48).

"இப்பொழுதே மரங்களின் வேரருகில் கோடரி போட்டிருக்கிறது. நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்" (மத். 3:10).

"மிருகத்தையும், அதன் உருவத்தையும் நமஸ்கரித்து, தன் நெற்றியிலாவது, தன் கையிலாவது அதன் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறவன் எவனோ, அவன் சர்வேசுர னுடைய கோபாக்கினையின் பாத்திரத்தில் ஒரு கலப்பு மின்றி வார்க்கப்பட்ட அவருடைய கோபாக்கினையாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், செம்மறிப்புருவையானவருக்கு முன்பாகவும் அக்கினி யிலும், கந்தகத்திலும் உபாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பிக் கொண்டிருக்கும்... அவனுக்கு இரவும் பகலும் இளைப்பாற்றி இராது" (காட்சி. 14:9-11).

"வானத்திலிருந்து சர்வேசுரனால் அக்கினி இறங்கி, அவர்களைப் பட்சிக்கின்றது. அவர்களை மயக்கின பசாசு அக்கினியும் கெந்தகமுமுள்ள தடாகத்திலே தள்ளப்பட்டது. அவ்விடத்திலே மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியும் இரவும் பகலும் என்றென்றைக்கும் உபாதிக்கப்படுவார்கள்" (காட்சி . 20:9-10).

“தங்களுடைய ஆதி மேன்மையைக் காப்பாற்றிக் கொள்ளாமல், தங்கள் வாசஸ்தலத்தைக் கைவிட்ட தூதர்களையும் மகா நாளின் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினால் கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்" (யூதா .1:6).

“அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தாரும், அவர்களைப் போல் விபசாரிகளாகி, அந்நிய மாம்சத்தைப் பின்பற்றின மற்றச் சுற்றுப்புறத்தாரும் நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, மற்றவர்களுக்குப் படிப்பினை யானார்கள்” (யூதா.1:7).

“ஆண்டவர் தம் அர்ச்சியசிஷ்டவர்களிடம் மகிமைப்படத் தக்கவரும், அவரை விசுவசித்த சகலரிடமும் ஆச்சரியப்படத் தக்கவருமாய் வரும்போது தீயோர் ஆண்டவரின் சன்னிதானத்திலும், அவருடைய வல்லமை யின் மகிமையிலும் நின்று தள்ளப்பட்டு, கேட்டுக்குள்ளாகி நித்திய தண்டனையை அடைவார்கள்” (2தெச.1:8).

இவ்வளவு வேதாகம சாட்சியங்கள் இருந்தும், நரகத்தை மறுதலிக்கிறவன், வேதாகமங்களின் மெய்யான ஆசிரியராகிய சர்வேசுரனைப் பொய்யராக்கத் தேடுகிறான். அவருடைய கடுஞ்சினத்திற்கும், தண்டனைத் தீர்ப்புக்கும் தகுதியுள்ளவனாகிறான்.