யேசுநாதருடைய பிரிசித்த சீவியத்தின் பேரிலும், மனித இரக்ஷணியத்தின் பேரிலும்

59. யேசுநாதர் சுவாமி இவ்வுலகத்திலே எத்தனை வருடகாலம் இருந்தார்? 

முப்பத்து மூன்று வருடகாலம் இருந்தார்.


60. இவ்வுகைத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்? 

சகல புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து, தம்முடைய திவ்விய வேதத்தைப் போதித்து, அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.


61. அவர் செய்த பிரதான அற்புதங்கள் எவை? 

குருடருக்குப் பார்வையும், செவிடருக்குச் செவியும், பல்வேறு பிணியாளிகளுக்கு ஆரோக்கியமும், மரித்தவர்களுக்கு உயிரும் அவர் கொடுத்தது.மல்லாமல். கடைசியிலே தம்மைத் தாமே கல்லறையில் நின்று உயிர்ப்பித்தார்.


62. மனித இரட்சிப்பு என்கிற, பரம இரகசியம் ஆவதென்ன?

பாவத்தினின்றும் நரகத்தினின்றும் மனிதனை மீட்கும்படி மனிதனுக்காக யேசுநாதர் சுவாமி உத்தரவாதியாகி பாடுபட்டு தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தது மனித இருப்பு எனப்படும்.


63. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?

மனித சுபாவத்திலே பாடுபட்டார்.


64. யாருக்காகப் பாடுபட்டார்?

நமக்காகப் பாடுபட்டார்.


65. என்ன பாடுபட்டார்?

போஞ்சுபிலாந்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டு சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தையடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். 


66. யேசுநாதர் சுவாமி எந்தக்கிழமையில் மரணமடைந்தார்? 

பரிசுத்தவாரம் பெரிய வெள்ளிக்கிழமை மத்தியானத்திற்கு மேல் மூன்று மணி வேளையில் மரணம் அடைந்தார்.


67. அப்போது சுவாமியுடைய ஆத்துமம் எங்கே போயிற்று?

பாதாளங்களிலே இறங்கி, அங்கேயிருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்ச பாக்கியம் கொடுக்கபோயிற்று.


68. அவருடைய திருச்சரீரத்தை எங்கே அடக்கம் செய்தார்கள்? 

கல்வாரி மலையிலே ஒரு புதுக்கல்லறையிலே அடக்கம் செய்தார்கள்.