மரண சமயத்தில் பரிபூரண பலனளிக்கும் ஜெபம்

என் தேவனாகிய ஆண்டவரே!  எவ்வகையான மரணத்தை எனக்கு அனுப்ப உமக்கு சித்தமோ, அம்மரணத்தையும் அதைச் சேர்ந்த துக்க துயர வேதனை நோக்காடுகளோடு கூட, இதோ இச்சணமே உமது கரத்திலிருந்து சமாதான அமரிக்கையோடும், முழு மன சம்மதத்தோடும் ஏற்றுக் கொள்ளுகிறேன்.

ஆமென்.

(பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்கியபின், சர்வேசுரன்பேரில் மெய்யான சிநேகப் பற்றுதலோடு மேற்சொல்லிய செபத்தை தங்கள் ஆயுசு காலத்தில் எப்போதாகிலும் ஒரு தடவை செபிப்பவர்கள் மரண சமயத்தில் சாவான பாவமின்றி தேவ இஷ்டப் பிரசாதமுடையவர்களாய் இருப்பார்களேயாகில் வேறெதுவும் செய்யத் தேவையின்றி, அவர்களுடைய ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரியும் வேளையில் அவர்களுக்கு ஒரு பரிபூரண பலன் உண்டு.)