அவஸ்தையாயிருக்கிற ஆத்துமங்களுக்காக செய்யத்தகும் சுகிர்த ஜெபம்

கருணாம்பர சேசுவே!  ஆத்துமாக்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய திவ்விய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட மரண அவஸ்தையையும் தேவரீருடைய மாசில்லாத திருத்தாயானவள் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து, இன்று தானே பூமியிலெங்கும் அவஸ்தையாய்க் கிடந்து சாகப்போகிற பாவிகளைத் தேவரீருடைய திரு இரத்தத்தினாலே சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட சேசு கிறீஸ்து நாதருடைய திவ்விய இருதயமே!  இன்று மரிக்கிறவர்களின் பேரில் இரக்கமாயிரும்.  

ஆமென்.

(மேற்படி செபத்தை செபிக்கும் ஒவ்வொரு விசைக்கும் நூறு நாட் பலனுண்டு.  அனுதினமும் ஒவ்வொரு நாளைக்கு மூன்று விசை வெவ்வேறே சமயங்களில் இந்த செபத்தை வேண்டிக் கொண்டால் மாதத்துக்கு ஒரு பரிபூரண பலன்.)