திவ்விய நற்கருணை வாங்கினபின் அடையத்தக்க பரிபூரண பலனுள்ள ஜெபம்

மகா மதுரம் பொருந்திய நல்ல சேசுவே! அடியேன் தேவரீருடைய திருச்சமூகத்தில் முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து: என் கைகளையும் என் கால்களையும் துளைத்தார்கள், என் எலும்புகளையயல்லாம் எண்ணினார்களென்று தேவரீரைப் பற்றி முன்னர் தாவீதென்கிற தீர்க்கதரிசி உமது வாயின் வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு, தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மன உருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் விசாரித்து நினைவில் தியானிக்கிற இந்நேரத்தில் திடனான விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேக மென்கிற சுகிர்த கருத்துக்களையும் என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தையும், அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கினையையும் என் இருதயத்தில் பதியச் செய்தருள வேணுமென்று என் நல்ல சேசுவே, தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடிப் பிரார்த்திக்கிறேன்.  

ஆமென்.

(பரிபூரண பலனடைய சேசுகிறீஸ்துநாதருடைய ஐந்து திருக்காயங்களைக் குறித்தும், அர்ச்சியசிஷ்ட பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்கள் அனுகூலமாகவும் 1 பர. அரு. திரி.  சொல்லவும்.)