12. குரு நற்கருணையை உயர எழுந்தருளப் பண்ணுகிற போது


சிலுவையில் அறையுண்ட சேசுநாதர் நமது பாவங்களுக்காகத் தம்மைத்தாமே அநாதி பிதாவுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தாரென்று நினைத்துக்கொள்.

சுவாமி! அளவில்லாத விலையேறப்பெற்ற இந்தப் பலியைப் பார்த்து பாவிகளாகிய எங்களுக்குத் தயை செய்ய வேணுமென்று தேவரீரை வேண்டிக்கொள்ளுகிறோம்.

சேசுகிறீஸ்துநாதரே சுவாமி! தேவரீருடைய திருச்சிலுவையினால் உலகத்தை மீட்டிரட்சித்தீரென்கிறதினாலே தேவரீரை வணங்கித் தோத்திரம் பண்ணுகிறோம்.

எங்களுக்காகக் கொடுக்கப்பட்ட சேசுநாதருடைய திருச்சரீரமே! உமக்கே நமஸ்காரம்.

சேசுநாதருடைய திருப்பாடுகளே, உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது.

ஆமென்.