குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர்.அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே பேறான திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் திரு இருதயத்தை வணங்க நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் படத்தை (சுரூபத்தை) அர்ச்சித்துப் ✠ புனிதப்படுத்த உம்மை இறைஞ்சுகின்றோம். இந்தப் படத்தின் (சுரூபத்தின்) முன் உம் திருமகனைப் பக்தியுடன் வழிபட்டு மகிமைப்படுத்தும் மக்கள் அனைவரும், இவ்வாழ்வில் அவரது அன்புப் பாதையில் நடந்து, மறுவாழ்வில் முடிவில்லா மகிமையடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய.........
எல்: ஆமென்.
(குரு படத்தின்மேல் தீர்த்தம் தெளிக்கிறார்.)