தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார் பகிரும் உள்ளங்கள் நடுவிலே பரமன் வருகின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தியாகப் பலியினிலே இறைவன் எழுகின்றார்

பகிரும் உள்ளங்கள் நடுவிலே பரமன் வருகின்றார்

வருகின்றார் வருகின்றார் அருளை நம்மில் பொழிகின்றார்


1. உறவில் நாளும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்

உண்மை வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்

கண்ணின் மணிபோல் என்னைக் காக்கும் பரமன் வருகின்றார்

கனிவாய் உன்னை நாளும் தேற்றும் பரமன் வருகின்றார்


2. அன்பில் என்றும் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்

அமைதி வழியில் நிலைத்து வாழப் பரமன் வருகின்றார்

உடனிருந்து உயிரை வழங்கும் பரமன் வருகின்றார்

தன்னைத் தந்து நம்மை மீட்கும் பரமன் வருகின்றார்