துன்பத்தின் பிடியில் நான் துடித்தாலும் என் இயேசு துணை வருவார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


துன்பத்தின் பிடியில் நான் துடித்தாலும்

என் இயேசு துணை வருவார்

இன்பத்தின் மடியில் நான் இருந்தாலும்

அங்கேயும் அவர் இருப்பார்


1. அல்லல்கள் துன்பங்கள் எனைச் சூழும் போது

அங்கேயும் அவர் வருவார்

தொல்லைகள் துயரங்கள் யாவுமே நீங்கிட

வல்லவர் அவர் வருவார்


2. கண்ணீரும் செந்நீரும் நான் சிந்தும் வேளை

நண்பனாய் அவர் வருவார்

கண்ணீரும் சிந்தாதே கவலையும் கொள்ளாதே

என்றவர் தேற்றிடுவார்