தியாகதீபம் இயேசுவின் ப்ரசன்னம் - நம்மைத் தேடிவந்த தெய்வ அன்பின் ப்ரசன்னம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தியாகதீபம் இயேசுவின் ப்ரசன்னம் - நம்மைத்

தேடிவந்த தெய்வ அன்பின் ப்ரசன்னம்

மன்னிக்கின்ற மனதில் இயேசு ப்ரசன்னம்

மனிதநேயம் தேடுவோரில் ப்ரசன்னம்

ப்ரசன்னம் ப்ரசன்னம் ப்ரசன்னம் ப்ரசன்னம்


1. கடலில் தவிப்போர் காணும் இயேசு ப்ரசன்னம்

கலங்கிப் புயலில் நிற்போர் காணும் ப்ரசன்னம்

மயங்கும் மாலைப்பொழுதில் இயேசு ப்ரசன்னம்

மயக்கும் மன அமைதி தரும் ப்ரசன்னம்

ஒளியே உயிரே உண்மையின் வடிவே

எம்மில் தருவாய் ப்ரசன்னம்

கருணைக்கடலே கனிந்த அன்பே

எம்மில் தருவாய் ப்ரசன்னம்


2. பாசம் உள்ள நெஞ்சில் இயேசு ப்ரசன்னம்

பகிர்ந்து வாழும் மனிதர் நடுவில் ப்ரசன்னம்

பாவ வாழ்வை நீக்கும் இயேசு ப்ரசன்னம்

பகிர்வு கொண்ட பணியில் இயேசு ப்ரசன்னம்