அன்பில் விளைந்த அமுதமே என்னில் மலர்ந்த தெய்வமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பில் விளைந்த அமுதமே என்னில் மலர்ந்த தெய்வமே

உயிரில் கலந்த ராகமே உறவில் எரியும் தீபமே

தேவனே இறைவனே தேடி வந்த தெய்வமே


1 தனித்துச் செல்லும் வழிகள் எல்லாம்

தலைவன் உனையே தேடவே

தவித்து ஏங்கும் விழிகள் எல்லாம்

தாகம் கொண்டு நாடவே

அணைத்துச் செல்லும் அன்னையாகி

அழைத்துச் சென்றாய் தெய்வமே

அன்பனே நண்பனே என்னை ஆளும் செல்வமே


2. கல்லும் முள்ளும் காடும் மலையும்

கடந்து செல்லும் வேளையில்

பொழுதும் சாய்ந்து புயலும் ஓய்ந்து

வாழ்க்கைப் படகும் மூழ்கவே

சின்ன எனது இதயம் தனை நீ

சிறகில் அமர்த்தி விரைகிறாய