ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் - இனி

எனக்கு குறைகள் ஒன்றும் இல்லையே

தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி

தலைவன் பாதையில் செல்லும் என் வழி

ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ


1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்

இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறாh

துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்

உயிராகி என்னைக் காக்கிறார்

எல்லாம் எனக்கு ஆயன் அவரே


2. இருளின் பாதையில் நான் நடக்க நேரினும்

தீமைகள் எதற்குமே அச்சமில்லையே

அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல்

அவரே என் அருகிருப்பதால்

எல்லாம் எனக்கு ஆயன் அவரே