ஆண்டவர் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள் மாண்புயர் மண்டலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் திருத்தலத்தில்

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

மாண்புயர் மண்டலத்தில்

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

அவர் செயல் மாண்பினை நினைத்து

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

அவரது மாட்சியை நினைத்து

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்


1. எக்காளத் தொனி முழங்க

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

வீணையும் யாழிசைத்து

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

முரசொலித்து நடனம் செய்து

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்

நரம்பிசைத்து குழல் ஊதி

அவரைப் புகழ்ந்தேத்துங்கள்


2. நாதமிகு தாளத்துடன் அவரை

கைத்தாள ஒலி முழங்க அவரை

உயிருள்ளவை எல்லாமே அவரை

ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரை