நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன் நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன்

நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன்


1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை -

இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார்

மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும்

என்றும் மலைபோல் அவர் தம் நீதி நிலைக்கும்


2. வியத்தகு செயல்கள் நினைவினிலே - என்றும்

விளங்கிட அவரே செய்தாரே

தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர்

தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்