நெஞ்சமே நெஞ்சமே நீ விழித்தெழு விழித்தெழு வீணையே வீணையே நீ விழித்தெழு விழித்தெழு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சமே நெஞ்சமே நீ விழித்தெழு விழித்தெழு

வீணையே வீணையே நீ விழித்தெழு விழித்தெழு

யாழே நீயும் விழித்தெழு கானம் பாடிட விழித்தெழு


1. ஆண்டவரில் என் ஆன்மா அடைக்கலம் தேடுதே

அவரது சிறகின் நிழலினிலே அனுதினம் மகிழ்ந்திடுதே

போற்றிடு அவர் பெயர் போற்றிடு

சாற்றிடு அவர் புகழ் சாற்றிடு


2. வானம் மட்டும் உயர்ந்தது அவரது பேரிரக்கம்

மேகம் மட்டும் சிறந்தது அவரது சொல்லுறுதி

வல்லவர் கடவுள் வல்லவர்

நல்லவர் ஆண்டவர் நல்லவர்