நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து நெஞ்சம் நிறை படைப்புக்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நெஞ்சே இறைவனை நீ வாழ்த்து

நெஞ்சம் நிறை படைப்புக்கள் இறைவனின்

தஞ்சம் கொண்டு வாழும் பெருமை எண்ணியே


1. அலைகடல் வான்முகில் மலையழகே

ஆண்டவன் புகழைப் பாடுங்களே

அலைந்திடும் மனதை நிலையாய் நிறுத்தி

மன்னவன் பெருமை கூறுங்களே


2. ஒளியைப் போர்வையாய் கூடாரமாய் - வான்

வெளியை விரித்து விளங்குகின்றீர்

மேகங்கள் நீர் வரும் தேரோ - ஓடும்

வெள்ளங்கள் உம் உறைவிடமோ

உமது ஆவியை அனுப்பினால்

உலகம் புத்துயிர் பெறுமே