உயிருள்ள உணவான நன்மைநாதரே உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்


உயிருள்ள உணவான நன்மைநாதரே

உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்

நன்றி செலுத்துகின்றோம்

பரலோக மன்னாவாகிய நன்மைநாதரே

நிறைவாழ்வு தருகின்ற நிறைவான நன்மைநாதரே

ஆன்ம உணவான நன்மைநாதரே

அப்பவடிவில் எழுந்தருள்கின்ற நன்மைநாதரே

பரலோக பயண உணவான நன்மைநாதரே

என்றும் அழியாத உணவான நன்மைநாதரே

பரலோகத்தை வெளிப்படுத்தும் நன்மைநாதரே

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த நன்மைநாதரே

உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் நன்மைநாதரே

என்றும் வாழச் செய்கின்ற நன்மைநாதரே

உலகு வாழ்வதற்காய் உணவான நன்மைநாதரே

இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்யும் நன்மைநாதரே

இறை அரவணைப்பை தருகின்ற நன்மைநாதரே

பசியைப் போக்கும் உணவான நன்மைநாதரே

உண்மையான உணவான நன்மைநாதரே

உலகுக்கு வாழ்வு தரும் நன்மைநாதரே

கடவுள் தரும் உணவான நன்மைநாதரே

அழியாத உணவான நன்மைநாதரே

பாஸ்கா விருந்தான நன்மைநாதரே

இறையாட்சியின் விருந்தான நன்மைநாதரே

இயேசுவின் உடலான நன்மைநாதரே

உண்பதற்காக தரப்பட்ட உணவான நன்மைநாதரே

ஆட்டுக்குட்டியின் திருமண விருந்தான நன்மைநாதரே

பேறுபெற்றோரின் உணவான நன்மைநாதரே

கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ள செய்யும் நன்மைநாதரே

அனைவரையும் ஓருடலாய் இணைக்கின்ற நன்மைநாதரே

ஆண்டவரின் திருவிருந்தான நன்மைநாதரே

ஆண்டவரின் சாவை அறிக்கையிடச் செய்யும் நன்மைநாதரே

அவர் வருகை வரை அறிவிக்கச் செய்யும் நன்மைநாதரே

தகுதியான நிலையில் உட்கொள்ளப் பணித்த நன்மைநாதரே

என்னை சோதித்தபின் உட்கொள்ள சொல்கின்ற நன்மைநாதரே

தகுதியோடு உண்டால் வலிமை தருகின்ற நன்மைநாதரே

தகுதியோடு உண்டால் நலம் தருகின்ற நன்மைநாதரே

தகுதியோடு உண்டால் தீர்ப்பிலிருந்து விடுவிக்கும் நன்மைநாதரே

எம்மாவு சீடர்களின் கண்களைத் திறந்த நன்மைநாதரே

உடைக்கப்பட்ட அப்பமாகிய நன்மைநாதரே

பலியாகி உணவான நன்மைநாதரே

இதயக் கதவை தட்டுகின்ற நன்மைநாதரே

கதவைத் திறந்தால் எழுந்தருள்கின்ற நன்மைநாதரே

எம்மோடு உணவு அருந்துகின்ற நன்மைநாதரே

நாங்கள் உம்மோடு உணவு அருந்தச் செய்கின்ற நன்மைநாதரே

வாழ்வுதரும் மரத்தின் கனியாகிய நன்மைநாதரே

வெற்றி பெறுவோர்க்கு உண்ண தருகின்ற நன்மைநாதரே

எங்கள் அன்றாட உணவாக வருகின்ற நன்மைநாதரே

அற்புதமான உணவான நன்மைநாதரே

எல்லா இனிமையும் கொண்ட உணவான நன்மைநாதரே

பல்சுவையும் கொண்ட உணவான நன்மைநாதரே

கடவுளின் இனிய உணவை வெளிப்படுத்தும் நன்மைநாதரே

உம்மை ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்

நன்றி செலுத்துகின்றோம்