என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய் உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னை மறவாமல் நீ அன்பு செய்தாய்

உனக்கென்ன கைம்மாறு நான் செய்வேன்

காற்றும் நீயே கடலும் நீயே

கருணை நீயே கனிவும் நீயே

அன்பெனும் சங்கமத்தின் நன்றி காணிக்கை

எந்தன் அன்பு காணிக்கை எந்தன் நன்றி காணிக்கை


1. உள்ளங்கள் என்றென்றும் உம்மையே சேரும்

உறவுகள் விட்டுச் சென்றால் பாதை மாறும்

கனவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு தெய்வம் இல்லை

வாழும் எந்நாளும் இனி உன்னோடு வாழ்வேன்


2. நெஞ்சங்கள் என்றென்றும் நேர்மையைத் தேடும்

நினைவுகள் விட்டுச் சென்றால் பாவம் சேரும்

நினைவுகளாலே வாழ்வு இல்லை

உன்னை அல்லால் ஒரு நிறைவும் இல்லை

வாழும் எந்நாளும் இனி நிறைவோடு வாழ்வேன்