ஜெபிக்க ஜெபிக்க இறை உறவில் நானும் மலர்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஜெபிக்க ஜெபிக்க இறை உறவில்

நானும் மலர்கின்றேன்

கொடுக்க கொடுக்கப் பிறர் உறவில்

நானும் மகிழ்கின்றேன்

படிக்கப் படிக்க உம் வார்த்தையில்

பாதை காண்கின்றேன்

பரமனே இறைவனே பலமும் பெறுகின்றேன்

அருள் நலமும் அடைகின்றேன்


1. ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு

அற்புதமாய் நீ கொடுத்தாயே

அப்படியே நாங்களும் பிறரின் தேவையில் - உம்

சொற்படியே உள்ளதைப் பகிர்ந்து வாழவே

அருள் தருவாய் குணம் தருவாய் அன்பின் தெய்வமே


2. அனைத்தும் படைத்து எமக்களித்து ஆண்டு ஆளும்

அதிகாரம் அன்புடனே நீ அளித்தாயே

அகமகிழ்ந்து நாளுமே அன்புப் பணியிலே - சுய

நலம் துறந்து வாழ்விலே இன்பம் காணவே

அருள் தருவாய் குணம் தருவாய் அன்பின் தெய்வமே