இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு இராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்

ஆத்ம நாதரின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம்


1. பார்போற்றும் தூய தூய தேவனே

மெய் இராஜனே எங்கள் நாதனே

பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே


2. இளைப்பாறுதல் தரும் வேந்தரே

இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே

ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே


3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே

பலனீந்து வலக்கரம் பிடிப்பீரே

ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்