அருளே எம்மில் வாழவந்த அருளே மகிழ்வே எங்கள் வாழ்வில் என்றும் மகிழ்வே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருளே எம்மில் வாழவந்த அருளே

மகிழ்வே எங்கள் வாழ்வில் என்றும் மகிழ்வே

வாழும் ஒரு தெய்வம் எமைத் தேடி வந்தது

பாதை அது காட்டி நின்று முன் நடந்தது

உள்நிறைந்து உலகளந்து உயிர் கொடுத்தது


1. ஞாலம் கண் காணுகின்ற வடிவெடுத்தது

எங்களோடு தெய்வம் வாழ்தல் உண்மையானது

வாழும் வழி தந்து உடன் துணையளித்தது

வழியமைத்தது உண்மை உயிர் கொடுத்தது

நிலமெனும் வீட்டில் நிலையொளி வந்தது

மனமென்னும் தோட்டம் அமைதியைக் கொண்டது

நீதியின் ஆதவன் மகிழ்வோடு உதித்தது


2. ஏழ்மை ஒரு சாபம் என்ற எண்ணம் போனது

தாழ்ந்தவரை உயர்த்தி தெய்வம் கருணை செய்தது

பெண்மை சமம் இல்லை என்ற நிலையும் ஓய்ந்தது

விடிவு வந்தது அடிமை நிலை முடிந்தது

விடுதலை வேட்கை எங்கும் எழுந்தது

துயர்களைத் தாங்கும் துணிவு பிறந்தது

தடைகளைத் தகர்த்திடும் நம் காலம் விடிந்தது