அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா திருவிருந்தே அருமருந்தே அருகினில் வருவாயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள்வடிவே ஆனந்தமே வரம் ஒன்று தருவாயா

திருவிருந்தே அருமருந்தே அருகினில் வருவாயா

ஒரு கணம் உனையழைத்தேன் நீ என் மனம் அமர்வாயா

என்னகம் நீ அமர்ந்து நீ ஒளிதனை பொழிவாயா

வழியாக வாழ்வாக வா


1. ஆகாயம் போன்ற உள்ளம் உன்னிடம் பார்க்கிறேன்

மடைதிறந்த வெள்ளம் போல உன் முகமே பார்க்கிறேன்

மலைபோன்ற உந்தன் உள்ளம் மன்னிக்க கேட்கிறேன்

தாய்மைக்கும் மேலாம் உந்தன் அன்பிதயம் கேட்கிறேன்

எனக்கினி ஏதும் இல்லை

நீதானே என் எல்லை அடைவேனே உன்னை


2. ஊதாரி மைந்தன் என்னை மன்னித்து ஏற்கிறாய்

வழிமாறிப் போன என்னை கரம் ஏந்திக் காக்கிறாய்

புகைவந்த சுடராய் என்னை மலைமீது ஏற்றினாய்

புறந்தள்ளி ஒதுக்கிய என்னை மூலைக்கல் ஆக்கினாய்

இனி உனக்காக வாழ்வேன்

இகமதை நானும் வெல்வேன் உயிர்ப்பேனே உன்னில்